Breaking News
Home / latest-update / நாட்டு மக்களுக்கு சஜித் இன்று வழங்கியுள்ள வாக்குறுதி
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

நாட்டு மக்களுக்கு சஜித் இன்று வழங்கியுள்ள வாக்குறுதி

எனது ஆட்சியில் நாட்டு மக்கள் அனைவரும் நிம்மதியாக வாழ முடியும் என்ற வாக்குறுதியை கொடுக்கின்றேன் என புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

மொனராகலை – வெள்ளவாய பகுதியில் இன்று புதிய ஜனநாயக முன்னணியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்று நடைபெற்றுள்ளது. இதன்போது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில்,

நான் ஆட்சிக்கு வந்தால் அதிகாரம் கொண்ட, முதுகெலும்புள்ள ஜனாதிபதியாக மக்களுக்கு சேவையாற்றுவேன். பழைய தாளத்துக்கு ஆடமாட்டேன்.

இளம் சமுதாயத்தினருக்கு உரிய இடத்தை வழங்க வேண்டும் என்பதுடன் பெண்கள் பொருளாதார ரீதியில் சிறப்பாக வாழக்கூடிய நிலைமைகளை உருவாக்கிக் கொடுக்க வேண்டும் என்பதே எமது நோக்கம்.

நானும் எனது அரசாங்கமும் பலமானதும், சிறப்பானதுமான இலங்கையை கட்டியெழுப்புவோம். அதில் நாட்டு மக்கள் அனைவரும் நிம்மதியாக வாழ முடியும் என்ற வாக்குறுதியை கொடுக்கின்றேன்.

அதேபோல் தேசிய பாதுகாப்பு குறித்து அச்சம் கொள்ளவேண்டிய அவசியம் இல்லை. எனது அரசாங்கத்தில் சரத் பொன்சேகா பாதுகாப்பு அமைச்சராக கடமையாற்றுவார்.

அதேபோல் தேசிய பாதுகாப்பு விடயத்தில் ஜனாதிபதி என்ற ரீதியில் நானும் சகல பொறுப்பையும் ஏற்றுக் கொள்வேன் எனக் கூறியுள்ளார்.

Check Also

கிளிநொச்சி பகுதியில் இடம்பெற்ற கோர விபத்து- பெண் ஒருவர் பலி

கிளிநொச்சி-பரந்தன் பிரதேசத்தில் டிப்பர் ரக வாகனம் ஒன்றும் உந்துருளி ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் பெண்ணொருவர் பரிதாபமாக பலியாகியுள்ளார். …

error: Content is protected !!