Breaking News
Home / latest-update / புனே டெஸ்ட்: ஒரு வழியாக தென்ஆப்பிரிக்காவை 275 ரன்னில் சுருட்டியது இந்தியா
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

புனே டெஸ்ட்: ஒரு வழியாக தென்ஆப்பிரிக்காவை 275 ரன்னில் சுருட்டியது இந்தியா

புனே டெஸ்ட்: ஒரு வழியாக தென்ஆப்பிரிக்காவை 275 ரன்னில் சுருட்டியது இந்தியா

பிலாண்டர், மகாராஜ், ஜடேஜா
இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மராட்டிய மாநிலம் புனேயில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 601 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

பின்னர் முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்கா இன்றைய 3-வது நாள் ஆட்டத்தில் 162 ரன்கள் எடுப்பதற்குள் 8 விக்கெட்டுக்களை இழந்து திணறியது.

9-வது விக்கெட்டுக்கு பிலாண்டர் உடன் மகாராஜ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி இந்தியாவின் பந்து வீச்சாளர்களை மிகப்பெரிய அளவில் சோதித்தது. இருவரும் நிலைத்து நின்று விளையாடினர். மகாராஜ் அரைசதம் அடித்தார். பிலாண்டர் பந்துகளை தடுத்தாடுவதில் முனைப்பு காட்டினார்.
ஜடேஜா, விராட் கோலி

இதனால் இன்றைய 3-வது நாள் ஆட்டம் முடிவிற்குள் தென்ஆப்பிரிக்கா ஆல்-அவுட் ஆக்குவது இந்திய பந்து வீச்சாளர்களுக்கு இயலாத காரியமாகி விடுமோ? என்ற நிலை இருந்தது. அந்தவேளையில்தான் 102-வது ஓவரை அஸ்வின் வீசினார். இந்த ஓவரின் 4-வது பந்தில் மகாராஜ் 72 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அப்போது தென்ஆப்பிரிக்கா 271 ரன்கள் எடுத்திருந்தது.

மகாராஜ் – பிலாண்டர் ஜோடி 9-வது விக்கெட்டுக்கு 42.1 ஓவர்கள் விளையாடி 109 ரன்கள் குவித்தது. அடுத்து வந்த ரபாடா 2 ரன்னில் அஸ்வின் பந்தில் ஆட்டமிழக்க தென்ஆப்பிரிக்கா 275 ரன்னில் ஆல்அவுட் ஆனது.

இந்திய அணி சார்பில் அஸ்வின் நான்கு விக்கெட்டுக்களும், உமேஷ் யாதவ் மூன்று விக்கெட்டுக்களும், முகமது ஷமி 2 விக்கெட்டுக்களும் வீழ்த்தினர்.

Check Also

யாழ் தெல்லிப்பளையில் திடீர் முற்றுகை…ஒரு தொகை போதைப் பொருளுடன் நால்வர் அதிரடியாக கைது..!!

வலிகாமம் வடக்கு- வித்தகபுரம் பகுதியில் வியாபாரத்திற்காக ஹெரோயின் போதைப் பொருளை பக்கெட்டுக்களில் அடைத்துக் கொண்டிருந்தபோது பொலிஸாா் சுற்றிவளைத்ததில் 2 பெண்கள் …