Breaking News
Home / latest-update / அமெரிக்காவின் புரூக்ளின் நகரில் துப்பாக்கிச் சூடு – 4 பேர் உயிரிழப்பு
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

அமெரிக்காவின் புரூக்ளின் நகரில் துப்பாக்கிச் சூடு – 4 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவின் புரூக்ளின் நகரில் துப்பாக்கிச் சூடு - 4 பேர் உயிரிழப்பு

துப்பாக்கிச் சூடு நடந்த இடம்
நியூயார்க்:

அமெரிக்காவின் நியூயார்க் மாநிலத்துக்குட்பட்ட புரூக்ளின் நகரில் உள்ள உட்டிக்கா அவென்யூ பகுதியில் ’டிரிபில் ஏ ஏசஸ்’ என்னும் சூதாட்ட கிளப் இயங்கி வருகிறது.

இந்த கிளப்பில் உள்ளூர் நேரப்படி இன்று காலை 7 மணியளவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர். படுகாயங்களுடன் ஒரி பெண் உள்பட 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

துப்பாக்கியால் சுட்டது யார்? காரணம் என்ன? என்பது தொடர்பாக உடனடி தகவல் ஏதும் வெளியாகாத நிலையில் இச்சம்பவம் தொடர்பாக இருவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருவதாக புரூக்ளின் நகர போலீசார் தெரிவித்துள்ளனர்.

Check Also

முல்லைத்தீவில் பேருந்து சேவைகளில் ஏற்பட்டுள்ள தடை!

முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் ஊடாக முத்தையன்கட்டு செல்லும் இலங்கை போக்குவரத்து சபை பேருந்து சேவைகளில் தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த …