Breaking News
Home / latest-update / சமூக ஆர்வலர்களின் நிதிப் பங்களிப்பில் பெறப்பட்ட நவீன சி.ரி.ஸ்கானர் சேவை யாழ் போதனா வைத்தியசாலையில் ஆரம்பித்து வைப்பு..!
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

சமூக ஆர்வலர்களின் நிதிப் பங்களிப்பில் பெறப்பட்ட நவீன சி.ரி.ஸ்கானர் சேவை யாழ் போதனா வைத்தியசாலையில் ஆரம்பித்து வைப்பு..!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு பொ.றஞ்சன் எஸ்.கதிர்காமநாதன் பி.நந்தபாலன் மற்றும் சமூக ஆர்வலர்களின் நிதிப் பங்களிப்பு மூலம் வழங்கப்பட்ட நவீன சி.ரி.ஸ்கானர் சேவை ஆரம்பித்துவைக்கப்பட்டது.யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நவீன சி.ரி.ஸ்கானர் சேவையை இன்று சனிக்கிழமை இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தார்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தலைமையில் காலை 8.30 இற்கு இந்நிகழ்வு இடம்பெற்றது.   இந்த நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன், வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க் கட்சித் தலைவர் சி.தவராசா, வைத்தியர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.      

Check Also

முல்லைத்தீவில் பேருந்து சேவைகளில் ஏற்பட்டுள்ள தடை!

முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் ஊடாக முத்தையன்கட்டு செல்லும் இலங்கை போக்குவரத்து சபை பேருந்து சேவைகளில் தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த …