Breaking News
Home / latest-update / முல்லை கொக்குத் தொடுவாயில் கோர விபத்து.!பாடசாலை மாணவன் ஸ்தலத்தில் பலி..!!மற்றுமொரு மாணவன் படுகாயம்!
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

முல்லை கொக்குத் தொடுவாயில் கோர விபத்து.!பாடசாலை மாணவன் ஸ்தலத்தில் பலி..!!மற்றுமொரு மாணவன் படுகாயம்!

முல்லைத்தீவு- கொக்குதொடுவாய் பாடசாலைக்கு முன்பாக இன்று காலை விபத்து ஒன்று இடம் பெற்றுள்ளது. இந்த விபத்தில், பாடசாலை மாணவன் ஒருவன் உயிாிழந்துள்ளான்.மேலும் ஒரு மாணவன் படுகாயமடைந்துள்ளார்.பாடசாலைக்கு முன்பாக வீதியில் சைக்கிளில் சென்ற மாணவர்களை கொக்குளாயிலிருந்து முல்லைத்தீவு நோக்கி வந்த வாகனம் மோதிj; தள்ளியதில் சம்பவ இடத்திலேயே ஒரு மாணவன் பலியாகியதுடன் மேலும் ஒரு மாணவன் படுகாயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.இந்த விபத்து சம்பவம் காரணமாக, ஆத்திரமடைந்த மக்கள் பாடசாலை முன்பாக குவிந்துள்ளனர்.பொலிஸார் விபத்தை ஏற்படுத்திய நபருக்கு சாதகமாக செயற்படுவதாக தெரிவித்து மக்கள் குழுமியுள்ளதால் கொக்குதொடுவாயில் தற்போது பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.செல்வரத்தினம் கேதீஸ் (வயது11) என்ற மாணவனே பலியாகியுள்ளார். மிகவும் வறுமைகோட்டுக்குள் வாழும் குறித்த மாணவன், கல்வி செயற்பாடுகளில் சிறந்து விளங்கியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.இதேவேளை விபத்தை ஏற்படுத்திய சிங்கள சாரதியை காப்பாற்றும் முயற்சியில் பொலிஸாா் ஈடுபட்டதாக மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனா். சம்பவம் குறித்து மேலதிக விபரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

Check Also

முல்லைத்தீவில் பேருந்து சேவைகளில் ஏற்பட்டுள்ள தடை!

முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் ஊடாக முத்தையன்கட்டு செல்லும் இலங்கை போக்குவரத்து சபை பேருந்து சேவைகளில் தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த …