Breaking News
Home / latest-update / ரயிலில் அடிப்பட்டு உயிரிழந்த பிச்சைக்காரனின் பணப்பையை பார்த்த பொலிஸாருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி..!!
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

ரயிலில் அடிப்பட்டு உயிரிழந்த பிச்சைக்காரனின் பணப்பையை பார்த்த பொலிஸாருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி..!!

மும்பையில் ரயிலில் அடிப்பட்டு உயிரிழந்த பிச்சைக்காரர் தனது குடிசையில் ரூ.1.75 லட்சம் சில்லறைக் காசுகளை வைத்திருந்ததுடன், வங்கிக் கணக்கில் ரூ.8.77 லட்சத்துக்கான டெபாசிட் செய்திருக்கிறார்.இதைக் கண்டு ரயில்வே பொலிஸார் ஆச்சர்யம் அடைந்தனர்.மும்பையின் மன்கர்ட்- கோவண்டி ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் 82 வயதான நபர் ஒருவர் வெள்ளிக்கிழமை ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்து கிடந்தார்.அவரது உடலை கைப்பற்றிய பொலிஸார் யார் என்ன என்பது சுற்றி உள்ளவர்களிடம் விசாரித்தனர் .அவர் பெயர் பிரடிசந்த் பனாரம் ஆசாத் என்பதும், ரயில்வே ஸ்டேஷனில் பிச்சை எடுப்பவர் என்றும், அவருக்கு உறவினர்கள் யாரும் இல்லை, என்றும் தனியாகவே ரயில்வே டிராக் அருகிலுள்ள குடிசையில் வசித்து வருகிறார் என்றும் அந்த பகுதிவாசிகள் தெரிவித்து இருக்கிறார்கள்.

இதைக் கேட்ட ரயில்வே பொலிஸார், அவரது குடிசைக்குள் சென்று உறவினர்களை பற்றி ஏதேனும் தகவல் கிடைக்குமா என்ற நோக்கில் பார்த்திருக்கிறார்கள்.அப்போது அங்கு நான்கு பெரிய மூட்டை இருந்திருக்கின்றன. அதில் சில்லறைக் காசுகளாக இருந்தன. அதை எண்ணியபோது ரூ.1.75 லட்சம் இருந்திருக்கிறது பின்னர் அருகிலேயே பெரிய இரும்பு பெட்டி ஒன்று இருந்தது. அதில் வங்கி பாஸ்புக் இருந்திருக்கிறது.

அத்துடன் இரண்டு வங்கிகளில் சேர்த்து சுமார் ரூ.8.77 லட்சத்துக்கான வங்கி வைப்புத் தொகைக்கான ரசீது, ஆதார், பான்கார்டு ஆகியவையும் இருந்திருக்கிறது.வங்கி பாஸ்புக்கில் உரித்தாளர் என்று அவர் மகன் சுகதேவ் பெயரும் ராஜஸ்தானில் உள்ள ராம்கர் முகவரியும் இடம் பெற்று இருந்திருக்கிறது. இதையடுத்து, சுகதேவை தொடர்புகொண்ட பொலிஸார் அவரது தந்தையின் உடலை ஒப்படைக்க முடிவு செய்துள்ளார்கள்.

Check Also

முல்லைத்தீவில் பேருந்து சேவைகளில் ஏற்பட்டுள்ள தடை!

முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் ஊடாக முத்தையன்கட்டு செல்லும் இலங்கை போக்குவரத்து சபை பேருந்து சேவைகளில் தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த …