Breaking News
Home / latest-update / பட்டிருப்பு கல்வி வலயத்தில் புலமைப்பரிசில் பரீட்சையில் 232 மாணவர்கள் சித்தி
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

பட்டிருப்பு கல்வி வலயத்தில் புலமைப்பரிசில் பரீட்சையில் 232 மாணவர்கள் சித்தி

2019ஆம் ஆண்டிற்கான புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் நேற்று வெளியாகியிருந்த நிலையில், பட்டிருப்பு கல்வி வலயத்தில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் 232 மாணவர்கள் சித்தி பெற்றுள்ளதாக பட்டிருப்பு வலயக் கல்வி பணிப்பாளர் ந.புள்ளநாயகம் தெரிவித்துள்ளார்.

வெளியாகியுள்ள புலமைப்பரிசில் பரீட்சையின் பட்டிருப்பு கல்வி வலயத்தின் சித்தி வீதம் தொடர்பில் வினவிய போதே அவர் இதனைக் கூறியுள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்,

இது சென்ற வருட சித்தி வீதத்தினை விட பாரிய அதிகரிப்பாகும். எதிர்காலத்தில் அனைத்து பொதுப் பரீட்சைகளிலும் இவ்வாறான பாரிய சித்தி வீத அதிகரிப்பினை ஏற்படுத்துவதற்கு அனைவரின் ஒத்துழைப்பும் தொடர்ச்சியாக இருக்க வேண்டும்.

கடந்த வருடம் எமது வலயத்தில் 152 மாணவர்களே சித்தி பெற்றிருந்தனர். ஆனால், இம்முறை 253 மாணவர்கள் வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தி பெற்றுள்ளனர்.

கடந்த வருட பெறுபேற்றினை சவாலாக கொண்டு அனைத்து பாடசாலைகளுக்கும் பெறுபேற்றினை உயர்த்தும் நோக்குடன் இரண்டு திட்டங்களை நாங்கள் முன்னெடுத்துள்ளோம்.

இதன்விளைவாக இம்முறை எமது வலயத்தின் பெறுபேற்றில் பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. இது எமக்கு கிடைத்த வெற்றியாகும்.

எமது வலயத்தினை பொறுத்த வரையில் படுவான் கரைப் பிரதேசத்தினை அண்டி காணப்படும் கஷ்ட, அதிகஷ்ட பாடசாலைகளின் சித்தி வீதமானது எமக்கு கடந்தக் காலங்களில் பாரிய பின்னடைவை ஏற்படுத்தியிருந்தது.

ஆனால், இம்முறை அப்பகுதி பாடசாலைகளின் பெறுபேறானது மிகவும் முன்னேற்றம் எமக்கு கிடைத்த இரண்டாவது பாரிய வெற்றியாகும்.

இதற்காக பாடுபட்ட அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை நான் தெரிவித்துக் கொள்கின்றேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Check Also

சற்று முன்னர் மேலும் 39 பேருக்கு கொரோனா….! எண்ணிக்கை 1317

இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1317ஆக அதிகரித்துள்ளது. ஏற்கனவே 1278 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் மேலும் …

error: Content is protected !!