Breaking News
Home / latest-update / புதிய லுக்குடன் அஜித்
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

புதிய லுக்குடன் அஜித்

நேற்று சென்னை விமான நிலையத்தில் தல அஜித்தை புதிய இளமையான தோற்றத்தில் பார்த்த ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்து அவருடன் செல்பி எடுக்க முண்டியெடுத்தனர். அஜித்தும் பொறுமையாக அனைவருடனும் செல்பி எடுத்து கொண்டார். ஒருசிலரிடம் இருந்து மொபைல் போனை வாங்கி அவரே செல்பி எடுத்து கொடுத்தார்.

இந்த நிலையில் ‘தல 60’படத்திற்கான புதிய லுக்தான் இந்த கெட்டப் என்றும், தல 60’ படத்தின் படப்பிடிப்பிற்குத்தான் அஜித் செல்வதாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால் அஜித் சென்றது டெல்லிக்கு

டெல்லியில் உள்ள டாக்டர் கர்னிசிங் துப்பாக்கி சுடும் மையத்திற்கு அஜித் சென்றுள்ளார். அங்கு அவர் துப்பாக்கி சுடும் பயிற்சியாளர்களுடன் ஆலோசனை செய்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

சமீபத்தில் கோவையில் நடைபெற்ற  10 மீட்டர் ஏர் பிஸ்டல், 50 மீட்டர் ப்ரீ பிஸ்டல் மற்றும் 25 மீட்டர் பிஸ்டல் ஆகிய பிரிவுகளில் பங்கேற்ற அஜித் அடுத்த சுற்றுக்கு தகுதியானதை அடுத்து, வரும் டிசம்பர் மாதம் மத்தியபிரதேச மாநிலம் போபால் நகரில் நடைபெறும் தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் அவர் பங்கு பெற உள்ளார். இந்த போட்டியில் பங்கேற்பது குறித்த ஆலோசனைக்காகவும் பயிற்சிக்காகவும் அவர் டெல்லி சென்றிருப்பதாக கூறப்படுகிறது

Check Also

முல்லைத்தீவில் பேருந்து சேவைகளில் ஏற்பட்டுள்ள தடை!

முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் ஊடாக முத்தையன்கட்டு செல்லும் இலங்கை போக்குவரத்து சபை பேருந்து சேவைகளில் தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த …