Breaking News
Home / latest-update / பரந்தனின் உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

பரந்தனின் உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

கிளிநொச்சி – பரந்தனில் உயிரிழந்த ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

ஒரு பிள்ளையின் தந்தையான இவர் குடும்பத்தில் ஏற்பட்ட கசப்பு காரணமாக தனிமையில் வாழ்ந்து வந்துள்ளார். இவரை 5 நாட்களாக தேடி வந்த குடும்பத்தினர் வீடொன்றில் துர்நாற்றம் வீசுவதனை அவதானித்துள்ளனர்.

இதனை பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதன் பின்னர் உயிரிழந்தவரின் சடலத்தினை பொலிஸார் மீட்டுள்ளனர்.

உயிரிழந்தவர் 29 வயதான நிதர்சன் எனத் தெரியவருகின்றது.

இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Check Also

முல்லைத்தீவில் பேருந்து சேவைகளில் ஏற்பட்டுள்ள தடை!

முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் ஊடாக முத்தையன்கட்டு செல்லும் இலங்கை போக்குவரத்து சபை பேருந்து சேவைகளில் தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த …