Breaking News
Home / latest-update / யாழ் கடற்கரையிலிருந்து கடற்படையினாரால் வெடிபொருட்கள் மீட்பு…!!
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

யாழ் கடற்கரையிலிருந்து கடற்படையினாரால் வெடிபொருட்கள் மீட்பு…!!

யாழ்ப்பாணம் – குருநகர் பகுதியிலிருந்து 1.3 கிலோகிராம் நிறையுடைய சி4 வெடிமருந்து கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.கொய்யாத்தோட்டம் கடற்கரைப் பகுதியில் அநாமதேயமாக இருந்த நிலையிலேயே குறித்த வெடிமருந்து இன்றைய தினம் மீட்கப்பட்டுள்ளது.இந்த வெடிமருந்தை மீன்பிடிப்பதற்காக பயன்படுத்த மீனவர்கள் எடுத்து சென்றிருக்கலாம் என கடற்படையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

அத்துடன் இந்த விடயம் தொடர்பில், யாரும் கைது செய்யப்படவில்லை என தெரியவருகிறது.இவ்வாறான நிலையில், மீட்கப்பட்ட வெடிமருந்தானது மண்டதீவு கடற்படை முகாமிற்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.மேலும், இந்த வெடிமருந்து தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு எந்த தகவலும் கொடுக்கப்படவில்லையெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Check Also

முல்லைத்தீவில் பேருந்து சேவைகளில் ஏற்பட்டுள்ள தடை!

முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் ஊடாக முத்தையன்கட்டு செல்லும் இலங்கை போக்குவரத்து சபை பேருந்து சேவைகளில் தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த …