Breaking News
Home / latest-update / வாள்வெட்டுக் கும்பலின் கொடூரத் தாக்குதலில் உயிரிழந்த வர்த்தகரின் இறுதி நிகழ்வுகள் இன்று..கோண்டாவிலில் கடையடைப்பு..!!
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

வாள்வெட்டுக் கும்பலின் கொடூரத் தாக்குதலில் உயிரிழந்த வர்த்தகரின் இறுதி நிகழ்வுகள் இன்று..கோண்டாவிலில் கடையடைப்பு..!!

வாள்வெட்டுக் கும்பலின் தாக்குதலால் உயிரிழந்த இரும்பக உரிமையாளரின் இறுதிக் கிரியைகள் இன்று இடம்பெறும் நிலையில் அவரது கொலையைக் கண்டித்தும் நீதிகோரியும் கோண்டாவில் உப்புமடப்பகுதியில் கடைகள், கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

கோண்டாவில் உப்புமடச் சந்தியில் அமைந்துள்ள லக்சுமி இரும்பகத்தின் உரிமையாளர் கந்தையா கேதீஸ்வரன் (வயது -47) என்பவரே வன்முறைக் கும்பலின் தாக்குதலில் உயிரிழந்தார்.இந்தச் சம்பவம் செம்ரெம்பர் 6ஆம் திகதி மாலை 4 மணியளவில் இடம்பெற்றது. அன்றுமாலை இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல் ஒன்று இரும்பகத்துக்குள் புகுந்து அதன் உரிமையாளரை கண்மூடித்தனமாகத் தாக்கியதுடன், இரும்பகத்துக்குள் அட்டூழியத்தில் ஈடுபட்டுவிட்டுத் தப்பித்தது.இரும்பகத்தில் இருந்த கட்டை ஒன்றை எடுத்து உரிமையாளரின் தலையில் கும்பல் தாக்கியிருந்தது. அதனால் தலையில் படுகாயமடைந்த அவர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் 24 நாள்களின் பின்னர் அவர் கடந்த திங்கட்கிழமை இரவு உயிரிழந்தார்.அவரது இறுதிக் கிரியைகள் இன்று இடம்பெறுகின்றன. அவரது கொலையைக் கண்டித்தும் நீதியான விசாரணை இடம்பெறவேண்டும் என்று வலியுறுத்தியும், கோண்டாவில் உப்புமடம் பகுதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையங்கள், கல்வி நிலையம் உள்ளிட்டவை மூடப்பட்டுள்ளன.

Check Also

ஜயரத்ன மலர்ச்சாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது ஆறுமுகன் தொண்டமானின் உடலம்

அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் திடீரென உயிரிழந்த நிலையில் அவரது உடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டநிலையில்வைத்தியசாலையிலிருந்து எடுத்து செல்லப்பட்டது. பூதவுடல் தற்போது ஜயரத்ன …

error: Content is protected !!