Breaking News
Home / latest-update / யாழில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட இராணுவ சோதனை சாவடிகள்
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

யாழில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட இராணுவ சோதனை சாவடிகள்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் உயிா்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பின்னா் அமைக்கப்பட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்னா் அகற்றப்பட்ட இராணுவ சோதனை சாவடிகள் மீண்டும் ஆங்காகே முளைத்திருக்கின்றது.

கண்டி நெடுஞ்சாலையில், நாவற்குழி பாலத்திலும் இராணுவ சோதனைச் சாவடி அமைக்கப்பட்டுள்ள போதிலும் அதில் சந்தேகத்துக்கு இடமான வாகனங்கள் மறிக்கப்பட்டு சோதனைகள் மேற்கொள்ளப்படுவதுடன் வாகன இலக்கங்களையும் பதிவு செய்கின்றனர்.

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதல்களை அடுத்து யாழ். குடாநாட்டின் பல பகுதிகளிலும் இராணுவ, பொலிஸ் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

கடந்த மாதம் முதல் இந்தச் சோதனை சாவடிகள் அகற்றப்பட்டன. இந்த நிலையில் மீண்டும் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு யாழ். குடா நாட்டின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Check Also

விபத்திற்குள்ளான விமானத்தில் கட்டு கட்டாக மீட்கப்பட்ட பணம்

பாகிஸ்தானில் விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்து இந்திய மதிப்பில் ரூ 3 கோடி மதிப்புள்ள வேறுநாட்டு பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. …

error: Content is protected !!