Breaking News
Home / latest-update / நவராத்திரி விரதம் நாளை ஆரம்பம்
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

நவராத்திரி விரதம் நாளை ஆரம்பம்

கலைகளை வளர்ப்பது ஆலயங்கள். ஆயகலைகள் 64இற்கும் நாயகியாக இருப்பவர் பராசக்தி கலைவாணி என சர்வதேச இந்துமத குருபீடாதிபதி ஸ்ரீ ஐயப்பதாஸ் குருக்கள் தெரிவித்தார்.

இந்துக்களால் அனுஷ்ட்டிக்கப்டும் நவராத்திரி விரதம் நாளை ஆரம்பமாகவுள்ள நிலையில் நவராத்திரியின் சிறப்புக்கள் தொடர்பில் எமது செய்திச்சேவைக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கலைகளை வளர்ப்பது ஆலயங்கள் . ஆயகலைகள் 64இற்கும் நாயகியாக இருப்பவர் அன்னை பராசக்தியாய் இருக்கும் சரஸ்வதி என்னும் கலைவாணி.

நவராத்திரி விரதம் புரட்டாசி மாதத்தில் சூரியன் கன்னி இராசியில் சஞ்சரிக்கும் காலத்தில் பராசக்தியை குறித்து நோற்கப்படும் விரதமாகும்.

நவராத்திரி புரட்டாசி மாதத்தில் அமாவாசை கழிந்த பூர்வபட்ச பிரதமை திதியில் ஆரம்பித்து நவமி முடியும் வரை செய்யப்படும். நவராத்திரி என்பது 9 நாட்களல்ல. அது 9 திதிகளாகும். புரட்டாதி மாதத்தில் வளர்பிறைப் பிரதமை முதல் நவமி வரை ஒன்பது நாளும் அன்னை பராசக்தியை துர்க்கையாக சரஸ்வதியாக லட்சுமியாக வழிபட்டு அனுஷ்ட்டிக்கப்படும்.

Check Also

முல்லைத்தீவில் பேருந்து சேவைகளில் ஏற்பட்டுள்ள தடை!

முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் ஊடாக முத்தையன்கட்டு செல்லும் இலங்கை போக்குவரத்து சபை பேருந்து சேவைகளில் தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த …