Breaking News
Home / latest-update / பேட்ட படத்தின் வசூல் சாதனையை முறியடித்த காப்பான்
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

பேட்ட படத்தின் வசூல் சாதனையை முறியடித்த காப்பான்

பேட்ட படத்தின் வசூல் சாதனையை முறியடித்த காப்பான்

ரஜினி, சூர்யா
சூர்யா-கே.வி.ஆனந்த் 3-வது முறையாக கூட்டணி சேர்ந்த படம் ’காப்பான்’. மோகன்லால், ஆர்யா, சாயீஷா, பொம்மன் இரானி போன்ற நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படம் கடந்த வெள்ளியன்று உலகம் முழுவதும் ரிலீசாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. வசூலிலும் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது.
சூர்யா, ரஜினி
அந்த வகையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 20-ந் தேதி வெளியான காப்பான் படம் முதல் நாளில் 2.2 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இதன்மூலம் முதல் நாளில் அதிகம் வசூல் செய்த தமிழ் படம் என்ற சாதனையை படைத்துள்ளது. இதற்கு முன் ரஜினியின் பேட்ட படம் முதல் நாளில் 2.1 கோடி வசூலித்து முதலிடத்தில் இருந்தது. தற்போது காப்பான் படம் அதனை முறியடித்துள்ளது.

Check Also

முல்லைத்தீவில் பேருந்து சேவைகளில் ஏற்பட்டுள்ள தடை!

முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் ஊடாக முத்தையன்கட்டு செல்லும் இலங்கை போக்குவரத்து சபை பேருந்து சேவைகளில் தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த …