Breaking News
Home / latest-update / புதிய கெட்டப்பில் அஜித்- வைரலாகும் புகைப்படம்
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

புதிய கெட்டப்பில் அஜித்- வைரலாகும் புகைப்படம்

புதிய கெட்டப்பில் அஜித்- வைரலாகும் புகைப்படம்

அஜித்
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. அஜித்தின் அடுத்த படத்தையும் எச்.வினோத் இயக்குகிறார். போனிகபூர் தயாரிக்கிறார். இது ஆக்‌ஷன் கலந்த கமர்ஷியல் படமாக உருவாகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் பூஜையுடன் தொடங்குகிறது.
படத்தில் நடிக்கும் இதர நடிகர், நடிகைகள் தேர்வு நடக்கிறது. ஸ்ரீதேவியின் மகள் ஜான்வியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் அஜித் பைக் ரேஸராக நடிக்கிறார்.
அஜித்
இந்நிலையில், நடிகர் அஜித் தனது மனைவி ஷாலினியுடன் சென்னையில் உள்ள உணவகம் ஒன்றிலிருந்து வெளியில் வரும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த வீடியோவில் அஜித் “டை” அடித்து புதிய கெட்டப்பில் இருப்பதால், புதிய படத்தில் இதே போன்ற தோற்றத்தில் தான் அஜித் இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Check Also

முல்லைத்தீவில் பேருந்து சேவைகளில் ஏற்பட்டுள்ள தடை!

முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் ஊடாக முத்தையன்கட்டு செல்லும் இலங்கை போக்குவரத்து சபை பேருந்து சேவைகளில் தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த …