Breaking News
Home / latest-update / பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான வலைப்பந்து தொடரில் கொழும்பை வீழ்த்தி யாழ் பல்கலை சம்பியன்..!!
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான வலைப்பந்து தொடரில் கொழும்பை வீழ்த்தி யாழ் பல்கலை சம்பியன்..!!

அண்மையில் நிறைவுற்ற 13வது இலங்கை பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டியின் வலைப்பந்தாட்ட இறுதிப் போட்டியில் கொழும்பு பல்கலைக்கழக அணியை வீழ்த்தி யாழ்ப்பாணம் பல்கலைக்கழக அணி சம்பியன் பட்டத்தை வென்றது.ருஹுணு பல்கலைக்கழக வளாகம் மற்றும் கோத்தவில விளையாட்டு வளாகத்தில் நடைபெற்ற இந்த தொடர் கடந்த ஓகஸ்ட் 29ம் திகதி முடிவுற்றது. இதில் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் மற்றும் மொரட்டுவைப் பல்கலைக்கழகம் என்பன முறையே 3ம் மற்றும் 4ம் இடங்களை பிடித்தன.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கு எதிரான அரையிறுதி போட்டியில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் 25-24 என வெற்றியீட்டியதோடு, மொரட்டுவ பல்கலைக்கழகத்திற்கு எதிரான மற்றைய அரையிறுதியில் கொழும்பு பல்கலைக்கழகம் 30-29 புள்ளிகள் அடிப்படையில் வெற்றியீட்டியது. இறுதிப் போட்டியில் 47-42 என்ற புள்ளியடிப்படையில் யாழ் பல்கலைகழகம் வெற்றியீட்டிக் கொண்டது.3ம் இடத்திற்கான போட்டி ஒரு பக்க ஆட்டமாக இருந்தது. இதில் மொரட்டுவை பல்கலைக்கழகத்திற்கு எதிராக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் 47-27 புள்ளிகளால் இலகு வெற்றியீட்டியது.

Check Also

முல்லைத்தீவில் பேருந்து சேவைகளில் ஏற்பட்டுள்ள தடை!

முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் ஊடாக முத்தையன்கட்டு செல்லும் இலங்கை போக்குவரத்து சபை பேருந்து சேவைகளில் தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த …