Breaking News
Home / latest-update / மானிப்பாய் தர்ஷிகாவுக்கு கனடாவில் நடந்த கொடூரங்களும் கொலையும்….!
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

மானிப்பாய் தர்ஷிகாவுக்கு கனடாவில் நடந்த கொடூரங்களும் கொலையும்….!

கனடாவில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட இலங்கை பெண் தொடர்பான பல தகவல்கள் வெளியாகி உள்ளன.

யாழ்ப்பாணம் மானிப்பாயை சேர்ந்த தர்ஷிகா என்பவர் அவரின் முன்னாள் கணவனினால் நடுவீதியில் வைத்து கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

அதிகளவான புலம்பெயர் தமிழ் மக்கள் வாழ்ந்து வரும் கனடாவில் இந்த கொடூர கொலை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டில் இந்தியாவில் வைத்து சசிகரனை திருமணம் செய்து கொண்ட தர்ஷிகாவின் வாழ்வில் ஆரம்பம் முதலே முரண்பாடுகள் ஏற்படத் தொடங்கின.

2017ஆம் ஆண்டு February மாதம் 27ஆம் திகதி கனடாவை வந்தடைந்தார் தர்ஷிகா. இவர்கள் இருவரும் ஆரம்பத்தில் சசிகரனின் பெற்றோரின் வீட்டில் வாழ்ந்தனர்.

ஆனாலும் இருவருக்கும் இடையில் அமைதியான வாழ்க்கை நீண்டகாலம் நீடிக்கவில்லை. கனடாவுக்கு புலம்பெயர்ந்த சில மாதங்களிலேயே தர்ஷிகா பெரும் மன உளைச்சலுக்கு உள்ளானார்.

சசிகரனால் தர்ஷிகா பல முறை தாக்கப்பட்டுள்ளார். இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் பொலிஸாரினால் அவர் கைது செய்யப்பட்டு தண்டனையும் அனுபவித்துள்ளார்.

பிணையில் விடுதலை செய்யப்பட்ட சகிகரன் “தர்ஷிகாவுடன் நேரடியாகவோ – மறைமுகமாகவோ தொடர்பை ஏற்படுத்த முனையக்கூடாது” என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

ஆனாலும் பிணை நிபந்தனைகளை சசிகரன் பின்பற்றவில்லை என்பதைத்தான் அவரது நீதிமன்றக் கோப்புக்கள் சுட்டிக் காட்டுகின்றன.

சசிகரன் மீது இரண்டு தாக்குதல் குற்றச்சாட்டுக்கள் நிலுவையில் உள்ளன.

தர்ஷிகா, உடல் ரீதியாக மாத்திரமல்ல மன ரீதியாகவும் பல துன்பங்களை எதிர்கொண்டார். அவரது கடவுச்சீட்டு பறிமுதல் செய்யப்பட்டது. தர்ஷிகா தனது குடும்பத்துடன் தொடர்புகளை பேணுவதற்கும் தடை விதிக்கப்பட்டது. இலங்கையில் வாழும் பெற்றோருடன் தொலைபேசியில் பேசுவதற்குக் கூட அவருக்கு அனுமதி இருக்கவில்லை.

கொலை செய்யப்பட்டபோது தர்ஷிகா, சசிகரனிடமிருந்து பிரிந்திருந்தார். தர்ஷிகா அரசாங்கம் மீதோ – ஏனையவர்கள் மீதோ சாராமல் தனது வாழ்வை நகர்த்த இறுதிவரை முயன்றவர். Dollarama அங்காடியில் தொழில் வாய்ப்பைப் பெற்றிருந்த தர்ஷிகா, தனது சக தொழிலாளர்களின் அளவற்ற அன்பையும் மரியாதையும் பெற்றிருந்தார்.

கணவனின் தொடர் வன்முறைகளின் எதிரொலியாக கடந்த சில வாரங்களாக விவாகரத்துப் பெற்றுக் கொள்ளும் எண்ணத்திலும் தர்ஷிகா இருந்தார்.

இதனை ஏற்றுக்கொள்ளாத சசிகரன் கடந்த 11ஆம் திகதி Dollaramaவில் வேலையை முடித்துக் கொண்டு வீடு திரும்பும் வழியில் தர்ஷிகாவை கொடூரமாக கத்தியால் குத்தியுள்ளார்.

சகிகரனினால் கொடூரமாக கத்திக்குத்து நடத்தப்பட்ட போதும் தன்னுயிரை காப்பாற்றும் நோக்கில் தனது வாடகை வீட்டை நோக்கி ஓடிச்சென்ற தர்ஷிகா – வெட்டுக் கத்தியால் பலமுறை வெட்டப்பட்டு – அநாதைபோல் யாரோ ஒருவரின் வீட்டின் முன் வீழ்ந்து மரணமடைந்தார்.

நடுத்தெருவில் திட்டமிட்டு கொலை செய்த சசிகரன், ரொரன்ரோ பொலிஸாரின் 42 ஆவது பிரிவு காவல் நிவையத்தில் – 45 நிமிடங்களின் பின்னர் – சரணடைந்துள்ளார். அந்தப் பொழுதில் அவர் குடிபோதையில் இருந்துள்ளார் – மேலும் பொலிஸ் அதிகாரி ஒருவரை தாக்க முனைந்துள்ளார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Check Also

ஏற்கனவே வௌியிடப்பட்ட அட்டவணையின் பிரகாரம் நாளையும் ரயில்கள் சேவையில் ஈடுபடும்

அலுவலக மற்றும் நகரங்களுக்கிடையிலான கடுகதி ரயில்கள், ஏற்கனவே வௌியிடப்பட்ட அட்டவணையின் பிரகாரம் நாளையும் (28) சேவையில் ஈடுபடும் என ரயில்வே …

error: Content is protected !!