Breaking News
Home / latest-update / நாடு முழுவதும் அடைமழை! நீரில் மூழ்கிய பல வீடுகள்
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

நாடு முழுவதும் அடைமழை! நீரில் மூழ்கிய பல வீடுகள்

நாடாளவிய ரீதியில் நிலவும் அடைமழையுடன் கூடிய சீரற்ற காலநிலை தொடர்ந்தும் நீடிக்கும் என வளிமண்டவியல ;திணைக்களம் அறிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்துடன் நிறைவடைந்தகாலப்பகுதியில் நாட்டின் பல பகுதிகளில் பெய்த அடைமழை காரணமாக சில இடங்களில் வெள்ள அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து நாட்டு மக்கள் மிகவும் அவதானத்துடன் இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் நேற்று இரவு முழுவதும் பெய்த அடை மழை காரணமாக பல பகுதிகளில் நீரில் மூழ்கியுள்ளதாகதிணைக்களத்தில் பிரதி இயக்குனர் பிரதிப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டையின் கீழ் மட்ட பகுதிகள் மற்றும் பல வீதிகள் இவ்வாறு நீரில் மூழகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தங்காலை – ஹம்பாந்தோட்டை பிரதான வீதியின் ஹுங்கம பட்டஅத்த பிரதேசத்தில் இரண்டு அடி நீரில் மூழ்கியுள்ளது. இதனால் போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அந்த இடங்களில் பல வீடுகள் நீரில் மூழ்கியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. இதற்கு மேலதிகமாக ஹம்பாந்தோட்டை, வெலிகத்த பிரதேசத்தில் பல வீடுகள் நீரில் மூழ்கியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

நாட்டின் பல பகுதிகளில் தொடர்ந்து அடை மழை பெய்து வருவதனால் எச்சரிக்கையாக இருக்குமாறு அவர் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

Check Also

சீனா: ரெஸ்டாரண்டில் கியாஸ் வெடித்து 9 பேர் பலி

சீனாவின் கிழக்கு கடற்கரை மாகாணத்தில் உள்ள ஒரு ரெஸ்டாரண்டில் கியாஸ் வெடித்து தீப்பிடித்ததில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தீ …