ரயில் சித்திரவதை

பதிவு செய்யப்பட்ட
புகையிரத இருக்கையைவிட
வேறு எதுவுமே
எனக்காய்
காத்திருப்பதில்லை.

மெல்ல நகரும்
ரயிலும் – நான்
மென்றே உமிழும்
எச்சிலும்,
இம்முறை
கொஞ்சம்
உஷ்ணமாய்..

என்
ரத்தத்தின் ஓட்டமோ
இந்த
ரயிலின் வேகத்தை
மிஞ்சும்..

யன்னல் தாழ்பாள்
களற்றப்பட்டும்
வேர்த்துக்கொட்டுவது
இங்கே
எனக்கு மட்டும்தான்.

பையில் இருந்த
ரயில் டிக்கெட்டை மறந்து,
டிக்கெட் பரிசோதகரிடம்
இருமுறை
தோற்றதும் நான்தான்..

கையில் இருந்த
புத்தகம்
புரியாமலும்,
காதில் மாட்டிய
இசை
இரைச்சலாயும்
இறுதிவரை இருந்தது,
எனக்கு மட்டும்தான்.

கடந்துவரும்
தண்டவாள ஒலியும்,
யன்னல் கடத்தும்
மஞ்சள் மாலை ஒளியும்
இன்று – என்னுள்
எதுவும் செய்வதாயில்லை.

தொலைபேசி சினுங்கியும்
எடுத்து பேச மனமில்லை.
பிடிமானம் இருந்தும்
எழுந்து நிற்க துணிவில்லை.

வடைக்காரன் கூட
என்
பசியை அறிகிறான்.
வயிறோ
சத்தியாக்கிரகம் செய்கிறது.

எதற்காய்
இன்று
இத்தனை
சித்திரவதை
இந்த ரயிலில்..

என்
முன்னைய இருக்கையில்
ஒருத்தி
அவளைப்போலவே இருக்கிறாள்.

பி.அமல்ராஜ்

Special Recent Posts

சூதாட்ட வீரர்கள் வீட்டில் ரெய்டு: ஸ்ரீசாந்த் லேப்-டாப், மொபைல் பறிமுதல்

சூதாட்ட வீரர்கள் வீட்டில் ரெய்டு: ஸ்ரீசாந்த் லேப்-டாப், மொபைல் பறிமுதல்

May 19th, 2013

சூதாட்டத்தில் ஈடுபட்ட ஸ்ரீசாந்த் தங்கிய மும்பை ஓட்டல் அறையில் இருந்து லேப்-டாப், ஐ-பேடு, டைரி உட்பட [...]

கேன்ஸ் திரைப்பட திருவிழாவில் துப்பாக்கிச்சூடு: ரூ.5.5 கோடி மதிப்புள்ள நகைகளும் கொள்ளை

கேன்ஸ் திரைப்பட திருவிழாவில் துப்பாக்கிச்சூடு: ரூ.5.5 கோடி மதிப்புள்ள நகைகளும் கொள்ளை

May 19th, 2013

பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் புகழ்பெற்ற கேன்ஸ் திரைப்பட திருவிழாவில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத[...]

தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ள பெரும்புள்ளிகளின் பட்டியல்: பாகிஸ்தான் உளவுத்துறை எச்சரிக்கை

தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ள பெரும்புள்ளிகளின் பட்டியல்: பாகிஸ்தான் உளவுத்துறை எச்சரிக்கை

May 19th, 2013

பாகிஸ்தானில் ஜனாதிபதி சர்தாரி உட்பட பெரும்புள்ளிகளில் வீட்டை தாக்க தலிபான் தீவிரவாதிகள் திட்டமிட்டுள[...]

கல்லூரி மாணவரை கடத்தி ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டிய கும்பல் கைது

கல்லூரி மாணவரை கடத்தி ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டிய கும்பல் கைது

May 19th, 2013

கல்லூரி மாணவரை கடத்தி, 50 லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டிய 4 பேரை காவல்துறையினர் கைது செய்து[...]

மனைவியுடன் தகராறு: கணவர் தீக்குளித்து தற்கொலை

மனைவியுடன் தகராறு: கணவர் தீக்குளித்து தற்கொலை

May 19th, 2013

மனைவியுடனான தகராறில் விரக்தி அடைந்த கணவர், தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். ஏர்வாடி [...]

Subscribe to Comments RSS Feed in this post

One Response

  1. கவிதையில் ஓர் பதிய பாணியை கையாண்டுள்ளீர்கள் சிறுகதையில் தான் இதை முன்பு காணமுடிந்தது—-
    வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*