Breaking News
Home / latest-update / வெள்ளவத்தையில் புகையிரதத்தில் மோதி இளம் பெண் உயிரிழப்பு
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

வெள்ளவத்தையில் புகையிரதத்தில் மோதி இளம் பெண் உயிரிழப்பு

கொழும்பு – வெள்ளவத்தை புகையிரத நிலையத்திற்கு அருகில் புகையிரதமொன்றில் மோதுண்டு பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் இன்று காலை 6.15 அளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கல்கிஸ்சையில் இருந்து மட்டக்களப்பு நோக்கி சென்ற புகையிரதத்தில் மோதியே குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.

அரலங்கவில – புதுகம பிரதேசத்தை சேர்ந்த 29 வயதான பெண்ணே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து வெள்ளவத்தை பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Check Also

முல்லைத்தீவில் பேருந்து சேவைகளில் ஏற்பட்டுள்ள தடை!

முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் ஊடாக முத்தையன்கட்டு செல்லும் இலங்கை போக்குவரத்து சபை பேருந்து சேவைகளில் தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த …