Breaking News
Home / latest-update / கொழும்பில் அட்டகாசம் செய்த ஆணும் பெண்ணும்! மிரண்டு போன பொலிஸார்
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

கொழும்பில் அட்டகாசம் செய்த ஆணும் பெண்ணும்! மிரண்டு போன பொலிஸார்

கொழும்பில் 3 மாதங்களில் 25 கடைகளை உடைத்து திருடிய இளம் தம்பதி குறித்து பொலிஸார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கிரிபத்கொட, பேலியகொட, கந்தான மற்றும் ஜாஎல பொலிஸ் பிரிவுகளிலுள்ள 25 கடைகளில் நுழைந்து திருடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த இருவரையும் கைது செய்ய சென்ற போது ஆண் தப்பிச் சென்றுள்ளார். எனினும் பெண் கைது செய்யப்பட்ட நிலையில் அவரது பையில் டெப் மற்றும் கையடக்க தொலைபேசிகள் இரண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இவை கிரிபத்கொட நகரத்தில் உள்ள வர்த்தக நிலையத்தில் திருடப்பட்டவை என உறுதியாகியுள்ளது. அந்த வர்த்தக நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடீவி கமராவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சிசிடிவி காணொளி உதவியுடன் குறித்த ஆணை தேடி வந்த பொலிஸ் அவரை தொட்டலங்க பிரதேத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதற்கு முன்னனர் செய்த பல குற்ற செயல்கள் தொடர்பில் இந்த நபர் கைது செய்யப்பட்டு 6 வருடங்கள் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டவர் என தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட இருவரும் போதைப்பொருள் பழக்கம் கொண்டவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Check Also

சீனா: ரெஸ்டாரண்டில் கியாஸ் வெடித்து 9 பேர் பலி

சீனாவின் கிழக்கு கடற்கரை மாகாணத்தில் உள்ள ஒரு ரெஸ்டாரண்டில் கியாஸ் வெடித்து தீப்பிடித்ததில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தீ …