Breaking News
Home / latest-update / அதிகாலையில் தீ வைத்து கொளுத்தப்பட்ட பாடசாலை அதிபரின் அலுவலகம்…!! கிளிநொச்சியில் நடந்த கொடூரம்..!!
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

அதிகாலையில் தீ வைத்து கொளுத்தப்பட்ட பாடசாலை அதிபரின் அலுவலகம்…!! கிளிநொச்சியில் நடந்த கொடூரம்..!!

கிளிநொச்சி கோணாவில் மகா வித்தியாலயத்தின் அதிபர் அலுவலகத்திற்கு விசமிகள் சிலர் தீ வைத்ததனால் அனைத்து ஆவணங்களும் தீக்கிரையாகியுள்ளது.குறித்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றிருக்கலாமெனச் சந்தேகிக்கப்படுகின்றது.இந்நிலையில் க.பொ.த சதாரண தர மாணவர்களுக்கு இடம்பெறுகின்ற விசேட வகுப்புக்கு இன்று காலை 6.30 மணியளவில், மாணவர்கள் பாடசாலைக்கு சென்ற போது அதிபர் அலுவலகத்திற்குள்லிருந்து புகை வெளியேறுவதனை அவதானித்துள்ளனர்.இதனையடுத்து, மாணவர்கள் உடனடியாக வகுப்புக்கு பொறுப்பான ஆசிரியருக்கு அறிவித்ததையடுத்து மாணவர்கள் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் ஒன்றிணைந்து தீயை அணைத்துள்ளனர்.இதன்போது அதிபர் அலுவலகத்தின் கதவு உடைத்து உள்ளே சென்ற விசமிகள் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்திருக்கலாம் என பொலீஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.அதிபரின் அறையின் உள்ளே மண்ணெண்ய் மணம் வீசுவதோடு, தீப்பெட்டி ஒன்றும் காணப்பட்டுள்ளது.விசமிகளின் இச்செயலால் காரணமாக பாடசாலை மாணவர்களின் பிறப்பு அத்தாட்சிப் பத்திரம், பரீட்சை பெறுபேறு ஆவணங்கள், ஆசியர்கள் தனிப்பட்ட விடயங்கள் அடங்கிய கோவைகள், மாணவர்களின் வரவு பத்திரங்கள் என அனைத்து ஆவணங்களும் எரிந்து அழிந்துள்ளன.எனினும் பாடசாலையின் கணக்கு நடவடிக்கைகள் அடங்கிய ஆவணங்கள் கொண்ட அலுமாரி ஒன்று காப்பற்றப்பட்டுள்ளதாக பாடசாலை அதிபர் இதயசிவதாஸ் தெரிவித்துள்ளார்.இந்த நிலையில், கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர், கரைச்சிக் கோட்டக் கல்வி அதிகாரி ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று நிலைமைகளை பார்வையிட்டுள்ள நிலையில், இந்த சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலீஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Check Also

நாடு முழுவதும் அடைமழை! நீரில் மூழ்கிய பல வீடுகள்

நாடாளவிய ரீதியில் நிலவும் அடைமழையுடன் கூடிய சீரற்ற காலநிலை தொடர்ந்தும் நீடிக்கும் என வளிமண்டவியல ;திணைக்களம் அறிவித்துள்ளது. கடந்த 24 …