Breaking News
Home / latest-update / இலங்கையர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான செய்தி..!! சற்று முன்னர் வெளியானது அறிவிப்பு.!!
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

இலங்கையர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான செய்தி..!! சற்று முன்னர் வெளியானது அறிவிப்பு.!!

தாமரைக் கோபுரம் 16 ஆம் திகதி திறக்கப்படவுள்ளது, இதன் நினைவாக முத்திரையும் வெளியிடப்படவுள்ளது.கொழும்பு, டி. ஆர். விஜயவர்தன மாவத்தையில் பேர வாவிக்கு மிக அருகாமையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தெற்காசியாவின் உயரமான கோபுரமாக அமையப்பெற்றுள்ள தாமரை கோபுரம் (Lotous Tower) எதிர்வரும் 16 ஆம் திகதி திங்கட்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் மாலை 5 மணிக்கு திறந்து வைக்கப்படவுள்ளது.இக் கோபுரத்தின் நினைவாக அன்றைய நாள் இலங்கை தபால் திணைக்களத்தினால் முத்திரை மற்றும் தபால் உறை வெளியிடும் நிகழ்வு இடம்பெறவுள்ளது.இந்த முத்திரை 45.00 ரூபா பெறுமதியில் வெளியிடப்படவுள்ளது.

இதனை கலைஞர் பசுபிட்டியேஜ் இசுரு சதுரங்கா (Pasupitiyage Isuru Chaturanga) உருவாக்கியுள்ளார்.356 மீற்றர் உயரமான இந்த தாமரைக் கோபுரம் 104 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸின் 300 மீற்றர் உயரமான ஈபில் கோபுரத்தினை விட உயரமாக அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.2012 ஆம் ஆண்டு சீன நிறுவனத்துடன் இணைந்து இதன் கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் எதிர்வரும் 16 ஆம் திகதி 2019 ஆம் ஆண்டு கட்டுமானப் பணிகள் நிறைவுற்று திறந்து வைக்கப்படுகின்றது.நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ஷ , பராளுமன்ற உறுப்பினர்கள், சீன தூதுவர் உட்பட வெளிநாட்டு தூதரக அதிகாரிகளும் கலந்துகொள்ளவுள்ளனர்.

Check Also

நாடு முழுவதும் அடைமழை! நீரில் மூழ்கிய பல வீடுகள்

நாடாளவிய ரீதியில் நிலவும் அடைமழையுடன் கூடிய சீரற்ற காலநிலை தொடர்ந்தும் நீடிக்கும் என வளிமண்டவியல ;திணைக்களம் அறிவித்துள்ளது. கடந்த 24 …