Breaking News
Home / latest-update / யாழ் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை…இப்படியும் ஏமாற்றுகிறார்கள்…!! ஜாக்கிரதை..!
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

யாழ் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை…இப்படியும் ஏமாற்றுகிறார்கள்…!! ஜாக்கிரதை..!

யாழ்ப்பாணம், கந்தர்மடம் சந்திக்கு அருகில் இயங்கிவரும் பிரமிட் வகை வியாபாரத்தில் ஈடுபடும் தனியார் நிறுவனம் ஒன்று , தம்மை ஏமாற்றி வருவதாக பொதுமக்கள் முறையிட்டுள்ளனர்.இது தொடர்பில் இலங்கை மத்திய வங்கியிலும் ஒருவர் முறையிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.அவர்கள் தம்மை ஏமாற்றி பொருட்களை விற்பனை செய்துள்ளதாகவும், அதை அறிந்த பின்னர் பொருட்களை மீள ஒப்படைத்தபோதும், குறித்த நிறுவனம் அதற்குரிய பணத்தை தர மறுப்பதாகவும் பாதிப்படைந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.தம்மிடம் பெறும் பணத்தின், பாதி பெறுமதியிலும் குறைந்த பொருட்களையே அவர்கள் வழங்குவதாகவும் முறையிட்டுள்ளனர்.செலுத்தும் பணத்திற்குரிய பொருள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தாம் நகைகளை விற்றும் பணம் செலுத்தி இருந்த நிலையில் குறித்த நிறுவனம் மோசடியில் ஈடுபடுகிறது.இந்நிலையில் கணவரிற்கு தெரியாமல் நகைகளை அடகு வைத்து 90,000 ரூபா குறித்த நிறுவனத்தில் தாம் செலுத்திய நிலையில், அவர்கள் 30,000 ரூபா பொருட்களையே வழங்கியதாக பாதிக்கபட்ட பெண்ணொருவர் முறையிட்டுள்ளார்.

இந்நிலையில், தம்மை தொடர்பு கொண்டவர் தலைமறைவாகி விட்டதாகவும் , அந் நிறுவனத்திற்கு சென்றால் உரிய பதிலை வழங்க மறுப்பதாகவும், வழங்கப்பட்ட பொருளை சேதாரமின்றி திருப்பி கொடுத்தும் பணம் தரவில்லை என கூறும் அவர்கள் மேலும், சிலரை இணைத்து தருவதன் மூலம் பணமீட்டலாம் என குறித்த பெண் தெரிவித்துள்ளார்.பாதிக்கப்பட்ட மூவர் அண்மையில் பொலிசாரிடம் முறையிட்டதையடுத்து, பணத்தை திருப்பி கொடுப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்த போது, பணம் இன்னனும் திருப்பிக் கொடுக்கப்படவில்லை எனவும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

அத்தோடு யாழில் இடம்பெற்ற என்ரப்பிரைஸ் சிறிலங்கா கண்காட்சியில் அமைக்கப்பட்டிருந்த மத்திய வங்கியின் காட்சிக்கூடத்தில், இது தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.இதேவேளை குறித்த பிரமிட் நிறுவனம் சாவகச்சேரியில் இயங்கி வந்த நிலையில், சாவகச்சேரி நீதிமன்றம் அந்நிறுவனம் அங்கு இயங்குவதற்கு தடைவிதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Check Also

நாடு முழுவதும் அடைமழை! நீரில் மூழ்கிய பல வீடுகள்

நாடாளவிய ரீதியில் நிலவும் அடைமழையுடன் கூடிய சீரற்ற காலநிலை தொடர்ந்தும் நீடிக்கும் என வளிமண்டவியல ;திணைக்களம் அறிவித்துள்ளது. கடந்த 24 …