Breaking News
Home / latest-update / ஐசிசி டெஸ்ட் தரவரிசை: விராட் கோலியை விட 34 புள்ளிகள் அதிகம் பெற்று ஸ்மித் முதலிடம்
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

ஐசிசி டெஸ்ட் தரவரிசை: விராட் கோலியை விட 34 புள்ளிகள் அதிகம் பெற்று ஸ்மித் முதலிடம்

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி முதல் இடத்தில் இருந்தார். ஓராண்டு தடைக்குப்பின் ஆஷஸ் தொடரில் களம் இறங்கிய ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் ஸ்மித் முதல் டெஸ்டின் இரண்டு இன்னிங்சிலும் சதம் விளாசினார்.

இதனால் விராட் கோலியை நெருங்கினார் ஸ்மித். வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான 2-வது டெஸ்டின் 2-வது இன்னிங்சில் விராட் கோலி டக்அவுட் ஆக சறுக்கல் ஏற்பட்டது. ஒரு புள்ளி வித்தியாசத்தில் விராட் கோலியை (903) பின்னுக்குத் தள்ளி ஸ்மித் (904) முதல் இடம் பிடித்தார்.



இந்நிலையில் ஓல்டு டிராபோர்டில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்டில் ஸ்மித் 211 மற்றும் 82 ரன்கள் அடிக்க ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் அதிக புள்ளிகள் பெற்றார். தற்போது வெளியிட்டுள்ள தரவரிசையில் ஸ்மித் 937 புள்ளிகள் பெற்று விராட் கோலியை விட 34 புள்ளிகள் வித்தியாசத்தில் முதல் இடத்தில் நீடிக்கிறார். விராட் கோலி 903 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளார்.



Check Also

சீனாவில் கொரோனா வைரஸ் பலி 1,860 ஆக உயர்ந்தது – தீவிர சிகிச்சை பிரிவில் 11 ஆயிரம் பேர்

சீனாவில் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1860 ஆக உயர்ந்துள்ள நிலையில் 11 ஆயிரத்து 947 பேர் மோசமான நிலையில் …