Breaking News
Home / latest-update / விஜய்க்கு கோரிக்கை வைத்த கங்கனா ரனாவத்
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

விஜய்க்கு கோரிக்கை வைத்த கங்கனா ரனாவத்

இயக்குனர் விஜய், வித்யா பாலனை வைத்து இயக்குவதாக இருந்த ஜெயலலிதாவின் பயோபிக், தற்போது கங்கனா ரனாவத் நடிப்பில் தயாராகி வருகிறது. `தலைவி’ எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்த படம், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் எடுக்கப்பட்டு வருகிறது.



தமிழ் மற்றும் தெலுங்கு பதிப்புகளுக்கு `தலைவி’ எனவும், இந்தி வெர்ஷனுக்கு ’ஜெயா’ எனவும் பெயரிடப்பட்டது. இந்த பெயர்கள் முன்னதாகவே அறிவிக்கப்பட்டிருந்தாலும், தற்போது இந்தப் பெயர்கள் குறித்த தன்னுடைய கருத்தை, இயக்குநர் விஜய்யிடம் கங்கனா தெரிவித்துள்ளார்.

`ஒரு திரைப்படம் மூன்று மொழிகளில் எடுக்கப்படும்போது, அவை மூன்றுக்கும் ஒரே பெயர் வைப்பது தானே சரியாக இருக்கும். அதனால், இந்தி வெர்ஷனுக்கும் `தலைவி’ என்கிற பெயரையே வைக்கலாம்’ என கங்கனா ரெக்வஸ்ட் வைக்க, இது குறித்து படக்குழு யோசித்து வருகிறது. ‘தலைவி’ என்கிற பெயரில் இந்தி வெர்ஷனின் டைட்டில் லுக் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.



Check Also

நாடு முழுவதும் அடைமழை! நீரில் மூழ்கிய பல வீடுகள்

நாடாளவிய ரீதியில் நிலவும் அடைமழையுடன் கூடிய சீரற்ற காலநிலை தொடர்ந்தும் நீடிக்கும் என வளிமண்டவியல ;திணைக்களம் அறிவித்துள்ளது. கடந்த 24 …