Breaking News
Home / latest-update / வவுனியாவில் இன்று இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயம்
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

வவுனியாவில் இன்று இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயம்

வவுனியா, வைரவ புளியங்குளத்தில் இன்று இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

வவுனியா நகரில் இருந்து திருநாவற்குளம் நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் முச்சக்கர வண்டியுடன் மோதியமையினால் இவ்விபத்து நேர்ந்துள்ளது.

இதன்போது, மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் படுகாயமடைந்துள்ள நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு படுகாயமடைந்தவர் 45 வயதுடைய த.பிரகலாதன் எனும் குடும்பஸ்தர் என தெரிவிக்கப்படுகிறது.

இவ்விபத்து தொடர்பில் வவுனியா போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Check Also

இலங்கைத் தாய்மார்களுக்கு கிடைத்த மிகச் சிறந்த கௌரவம்…சர்வதேச நாடுகளை பின் தள்ளி முதலிடத்திற்கு வந்த இலங்கை…!!

தாய்ப்பால் ஊட்டுவதை ஊக்குவிக்கும் உலகின் சிறந்த நாடாக இலங்கை தெரிவுசெய்யப்பட்டுள்ளது. உலக நாடுகளை பின்னுக்கு தள்ளி இலங்கை முதலாவது இடத்தை …