Breaking News
Home / latest-update / பாதுகாப்பு கெடுபிடிகளுக்கு மத்தியிலும் நல்லூர் ஆலயத்தில் குவியும் பெருமளவு புலம்பெயர் தமிழர்கள்
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

பாதுகாப்பு கெடுபிடிகளுக்கு மத்தியிலும் நல்லூர் ஆலயத்தில் குவியும் பெருமளவு புலம்பெயர் தமிழர்கள்

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தில் இதுவரை ஐந்து இலட்சத்திற்கும் மேற்பட்ட பக்கதர்கள் கலந்து கொண்டுள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

வழமையை விட ஆலயத்தில் வளாகத்தில் பாதுகாப்பு நெருக்கடிகள் அதிகரித்துள்ள நிலையிலும் பெருந்தொகை பக்தர்கள் கலந்து கொண்டதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக நல்லூர் ஆலய வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு, உடற்பரிசோதனையின் பின்னர் ஆலயத்திற்குள் செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

நல்லூர் கந்தனை தரிசிக்க பெருமளவு புலம்பெயர் தமிழர்கள் படையெடுத்துள்ளதாக குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

எதிர்வரும் 30ம் திகதி நடைபெறவுள்ள தேர்த் திருவிழாவின் போது பல இலட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Check Also

நாடு முழுவதும் அடைமழை! நீரில் மூழ்கிய பல வீடுகள்

நாடாளவிய ரீதியில் நிலவும் அடைமழையுடன் கூடிய சீரற்ற காலநிலை தொடர்ந்தும் நீடிக்கும் என வளிமண்டவியல ;திணைக்களம் அறிவித்துள்ளது. கடந்த 24 …