Breaking News
Home / latest-update / ஆர்டர் செய்த உணவு தாமதமாக கொண்டு வரப்பட்டதால் உணவக ஊழியருக்கு நேர்ந்த கதி!
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

ஆர்டர் செய்த உணவு தாமதமாக கொண்டு வரப்பட்டதால் உணவக ஊழியருக்கு நேர்ந்த கதி!

பிரான்சில் உணவகம் ஒன்றில் ஆர்டர் செய்த உணவு தாமதமாக கொண்டு வரப்பட்டதால், கடும் பசியில் இருந்த வாடிக்கையாளர் ஒருவர், உணவக ஊழியரை சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

பாரீஸில் நாய்சி-லீ-கிராண்ட் எனும் இடத்தில் உள்ள சான்ட்விச் கடைக்கு வந்த ஒருவர் சான்ட்விச் ஆர்டர் செய்துள்ளார்.

ஆனால் ஆர்டரை எடுத்த உணவக ஊழியர், மிக தாமதமாக உணவை தயார் செய்து கொண்டு வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் கடும் பசியில் இருந்த வாடிக்கையாளர், அந்த உணவக ஊழியரை சரமாரியாக திட்டியதோடு, தான் வைத்திருந்த துப்பாக்கியால் அவரை சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றார்.

கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த சம்பவம், அங்கிருந்த சக வாடிக்கையாளர்கள் மற்றும் உணவக ஊழியர்களை அச்சத்தில் உறையச் செய்தது.

இந்நிலையில் தகவல் அறிந்து அங்கு வந்த பொலிசார், தோளில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து படுகாயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அந்த ஊழியரை மீட்டு மருத்துவமனையில் சேர்க்க முயன்றனர்.

ஆனால் ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.

உயிரிழந்த அந்த உணவக ஊழியருக்கு 28 வயதுதான் ஆகிறது. இந்த கோர சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வரும் பொலிசார், துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிய வாடிக்கையாளரை தேடி வருகின்றனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் இந்த உணவகம் புதிதாக அங்கு திறக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Check Also

நாடு முழுவதும் அடைமழை! நீரில் மூழ்கிய பல வீடுகள்

நாடாளவிய ரீதியில் நிலவும் அடைமழையுடன் கூடிய சீரற்ற காலநிலை தொடர்ந்தும் நீடிக்கும் என வளிமண்டவியல ;திணைக்களம் அறிவித்துள்ளது. கடந்த 24 …