Breaking News
Home / latest-update / கந்தளாயில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்து: ஒருவர் படுகாயம்
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

கந்தளாயில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்து: ஒருவர் படுகாயம்

திருகோணமலை, கந்தளாயில் இன்று அதிகாலை வேகக் கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் வாகனமொன்று விபத்திற்குள்ளாகியுள்ளது.

குறித்த டிப்பர் வாகனம் வயல் வெளியில் விழுந்தமையினால் வாகனத்தின் சாரதிக்கு படுகாயம் ஏற்பட்டுள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.




இதன்போது, படுகாயமடைந்தவர் கந்தளாய், கெமுனு மாவத்தை பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய ரொசான் சிறிமேவன் என தெரியவந்துள்ளது.

இவ்விபத்து தொடர்பில் கந்தளாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




Check Also

மொத்த மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் சங்கத்தின் குற்றச்சாட்டு

இந்நாட்டில் அரிசி மாஃபியா என்பது பெரிய அளவிலான ஆலை உரிமையாளர்களின் நாடகமாகும் என மொத்த மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் சங்கம் …

error: Content is protected !!