Breaking News
Home / latest-update / மெக்சிகோவில் சாலை விபத்து- 7 பேர் பலி
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

மெக்சிகோவில் சாலை விபத்து- 7 பேர் பலி

மெக்சிகோவில் சாலை விபத்து- 7 பேர் பலி

மெக்சிகோ சிட்டி:
மெக்சிகோ நாட்டின் ஹிடால்கோ மாநிலத்தில் உள்ளது சிமாபன் நகரம். இங்குள்ள  சிமாபன் கலாச்சார மையத்தின் இசைக்குழுவைச் சேர்ந்த சிறுவர்கள், நேற்று ஒரு வாகனத்தில் மெக்சிகோ சிட்டிக்கு சென்று கொண்டிருந்தனர். அவர்களது பெற்றோர்கள் மற்றொரு வாகனத்தில் சென்றனர்.



மெக்சிகோ – லரேடோ நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக பெற்றோர்கள் சென்ற வாகனம் கட்டுப்பாட்டை இழந்ததால் சாலையோரத்தில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே 7 பேர் பலியாகினர். மேலும் 6 பேர் படுகாயம் அடைந்தனர்.



தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் காயம் அடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில்  அனுமதித்தனர். மேலும் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Check Also

பாக்- ஜலசந்தி கடற்பரப்பு வழியாக மன்னாரிலிருந்து நீந்தி இந்தியாவை சென்றடைந்த வெளிநாட்டுப் பெண்மணி..!!

அமெரிக்காவைச் சேர்ந்த எடிஹ என்ற பெண்மணி தலைமன்னார் முதல் தமிழகத்திலுள்ள தனுஸ்கோடி வரையிலான பாக் ஜலசந்தி கடலை 10.15 மணி …