இரத்தினபுரி, கிரியெல்ல – தும்பர பகுதியில் மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது.
20 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
வீட்டில் இரும்பு கட்டில் ஒன்றுக்கு அருகில் தரையில் உறங்கி கொண்டிருந்த போதே இவ்வாறு மின்னல் தாக்கி அவர் உயிரிழந்துள்ளார் என தெரியவருகிறது.