Breaking News
Home / latest-update / இரண்டரை வயது சிறுமி கிணற்றில் விழுந்து பரிதாபமாக பலி
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

இரண்டரை வயது சிறுமி கிணற்றில் விழுந்து பரிதாபமாக பலி

நுரைச்சோலை-நாயிப் நகர்-எத்தாலை பிரதேசத்தில் இரண்டரை வயது சிறுமி கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

குறித்த சிறுமியின் தாயார் வீட்டில் உணவு தயாரிப்பில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது, சிறுமி வீட்டுக்கு பின்னால் உள்ள கிணற்றில் விழுந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.




பின்னர், அக்கம் பக்கத்தினர் சிறுமியை கிணற்றிலிருந்து மீட்டெடுத்து கல்பிட்டி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதே சிறுமி இறந்துவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் கல்பிட்டி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.




Check Also

யாழ் மக்களின் நோய்ப் பிணிக்கு அருமருந்தாகும் அல்லை இளம் விவசாயியின் அற்புத பானம்…!! வாங்குவதற்கு படையெடுக்கும் பொதுமக்கள்..!

யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டியில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் இயற்கை விவசாய முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார் மகேஸ்வரநாதன் …