Breaking News
Home / latest-update / முல்லைத்தீவு – ஒட்டுசுட்டானில் விவசாய கிணற்றில் விழுந்து காட்டு யானை உயிரிழப்பு
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

முல்லைத்தீவு – ஒட்டுசுட்டானில் விவசாய கிணற்றில் விழுந்து காட்டு யானை உயிரிழப்பு

முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பிரதேசத்திற்குட்பட்ட சம்மளங்குளம் பகுதியில் விவசாய காணியில் காட்டுயானை ஒன்று விழுந்து உயிரிழந்துள்ளது.

விவசாயிகள் விவசாயம் செய்யும் விசாய கிணற்றில் கடந்த ஐந்து நாட்களுக்கு முன் குறித்த யானை விழுந்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவித்தும் இது வரையில் எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கிராம மக்கள் தெரிவித்துள்ளார்கள்.

சம்மளங்குளம் கிராமத்தில் காட்டுயானைகளின் தொல்லை அதிகரித்து காணப்படுவதாகவும், தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக தண்ணீருக்காக யானை அலைந்து கிணற்றில் வீழ்ந்துள்ளதாகவும் கிராம வாசிகள் தெரிவித்துள்ளார்கள்.

Check Also

யாழ் மக்களின் நோய்ப் பிணிக்கு அருமருந்தாகும் அல்லை இளம் விவசாயியின் அற்புத பானம்…!! வாங்குவதற்கு படையெடுக்கும் பொதுமக்கள்..!

யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டியில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் இயற்கை விவசாய முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார் மகேஸ்வரநாதன் …