Breaking News
Home / latest-update / யாழில். 107 உணவங்களில் பொது சுகாதார அதிகாரிகள் திடீர் ஆய்வு
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

யாழில். 107 உணவங்களில் பொது சுகாதார அதிகாரிகள் திடீர் ஆய்வு

வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனின் அறிவுறுத்தலுக்கு அமைவாக யாழ். மாநகர சபையின் எல்லைக்குட்பட்ட 107 உணவகங்களுக்கு பொதுச் சுகாதார அதிகாரிகள் மற்றும் உணவுக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் திடீர் கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டனர்.

உணவகங்களின் தரம் மற்றும் சட்டத்திற்கமைவாக இயங்குகின்றனவா என மேற்கொள்ளப்பட்ட இந்த கண்காணிப்பு நடவடிக்கையின்போது 76 உணவகங்களில் சுகாதார சீர்கேடுகள் காணப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றில் அதிகளவிலான சுகாதார சீர்கேடுகளுடன் காணப்பட்ட 26 உணவகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதுடன் 12 உணவகங்களில் காணப்பட்ட தகுதியற்ற உணவுகள் அழிக்கப்பட்டன.

மேலும், சுகாதார சீர்கேடுகளுடன் காணப்பட்ட உணவகங்களுக்கு மிக தகுதிவாய்ந்த உணவகங்களாக மாற்றியமைப்பதற்கான கால அவகாசம் பொதுச் சுகாதார அதிகாரிகளினால் வழங்கப்பட்டதுடன் தவறும் பட்சத்தில் குறித்த உணவகங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தக் கண்காணிப்பு நடவடிக்கையில் ஆளுநரின் 21 தனிப்பட்ட செயலணி உறுப்பினர்கள் ஒவ்வொரு அணியையும் பிரதிநிதித்துவப்படுத்தி செயற்பட்டதுடன் எட்டு பிரிவாக 51 பொதுச்சுகாதார அதிகாரிகள் ஈடுபட்டனர்.

இந்த நடவடிக்கை குறிப்பாக நல்லூர் மகோற்சவ திருவிழாவினை முன்னிட்டு மக்களின் நலன்கருதி சுத்தமான உணவுகள் வழங்கப்படவேண்டும் என்ற நோக்கில் ஆளுநரினால் அறிவுறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Check Also

யாழ் மக்களின் நோய்ப் பிணிக்கு அருமருந்தாகும் அல்லை இளம் விவசாயியின் அற்புத பானம்…!! வாங்குவதற்கு படையெடுக்கும் பொதுமக்கள்..!

யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டியில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் இயற்கை விவசாய முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார் மகேஸ்வரநாதன் …