Breaking News
Home / latest-update / இன்றைய ராசிபலன் – 05.08.2019
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

இன்றைய ராசிபலன் – 05.08.2019

மேஷம்

வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். பிள்ளைகளின் பெருமைகளை மற்றவர்களிடம் சொல்லி மகிழ்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். அமோகமான நாள்.

ரிஷபம்

சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். புதிய திட்டங்கள் நிறைவேறும். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். கடையை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் அலைச்சல்கள் குறையும். புதுமை படைக்கும் நாள்.

மிதுனம்

மனதிற்கு இதமான செய்தி வரும்.எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். போது யோசிப்பீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். வேலைகள் முடிவடையும் நாள்.



கடகம்

உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் உங்கள் கொள்கைகளில் சில மாற்றம் செய்வீர்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.

சிம்மம்

சுறுசுறுப்புடன் செயல்பட்டு தேங்கிக் கிடந்த வேலைகளை முடிப்பீர்கள். மனைவிவழியில் மதிப்புக் கூடும். அழகு, இளமைக் கூடும். நவீன மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். புத்துணர்ச்சி பெருகும் நாள்.

கன்னி

ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் பழைய பிரச்னைகள் தலைத்தூக்கும். உறவினர், நண்பர்களின் பேச்சும், செயல்பாடுகளும் உங்களுக்கு பிடிக்காமல் போகும். சொன்ன சொல்லை காப்பாற்ற வேண்டுமே என்ற பயம் வரும்.வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் சச்சரவு வரும். உத்யோகத்தில் சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில் தலையிட வேண்டாம். எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும் நாள்.



துலாம்

பண விஷயத்தில் கறாராக இருங்கள். அநாவசியச் செலவுகளைத் தவிர்க்கப் பாருங்கள். உடல் நலத்தில் கவனம் தேவை. வியாபாரத் தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள். உத்யோகத்தில் மற்றவர்களை நம்பி எந்த பொறுப்புகளையும் ஒப்படைக்க வேண்டாம். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.

விருச்சிகம்

ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். பெற்றோரின் ஆதரவுப் பெருகும். வீட்டை விரிவுப்படுத்துவது குறித்து யோசிப்பீர்கள். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். வியாபாரத்தில் வி.ஐ.பிகள்
வாடிக்கையாளர்களாவார்கள். உத்யோகத் தில் புதிய பொறுப்புகள் தேடி வரும். நன்மை பெருகும் நாள்.

தனுசு

சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். உறவினர், நண்பர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். பயணங்களால் பயனடைவீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப் பார்கள். வெற்றி பெறும் நாள்.



மகரம்

கணவன்-மனைவிக் குள் மனம் விட்டு பேசுவீர்கள். புது முடிவுகள் எடுப்பீர்கள். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். பணப்புழக்கம் கணிசமாக உயரும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் அமைதி உண்டா கும். புதிய அத்தியாயம் தொடங்கும் நாள்.

கும்பம்

சந்திராஷ்டமம் நீடிப்பதால் புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். அக்கம்-பக்கம் இருப்பவர்களை அனுசரித்துப் போங்கள். விமர்சனங்களை கண்டு அஞ்ச வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களால் தர்மசங் கடமான சூழல்களுக்கு ஆளாவீர்கள். உத்யோகத் தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.

மீனம்

விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வேற்றுமதத்தவர்கள் நண்பர்களாவார்கள். உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதர வகையில் ஆதாயமடைவீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் சந்தை ரகசியங்களை தெரிந்து கொள்வீர்கள். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார்.



Check Also

இந்தோனேசியா: கப்பலில் தீவிபத்து – குழந்தைகள் உள்பட 7 பேர் பலி

இந்தோனேசியாவில் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் இரு குழந்தைகள் உள்பட 7 பேர் பலியாகினர். மேலும் 4 நபர்களை காணவில்லை. …