Breaking News
Home / latest-update / விபத்தில் ஒருவர் பலி – 06 பேர் காயம்
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

விபத்தில் ஒருவர் பலி – 06 பேர் காயம்

கொழும்பு – கண்டி பிரதான வீதி நிட்டம்புவ – கலல்பிடிய பிரதேசத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்து 06 பேர் காயமடைந்துள்ளனர்.

கொழும்பில் இருந்து கதுறுவலை நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்றும் பாரவூர்தி ஒன்றும் மோதுண்டு குறித்த விபத்து நேர்ந்துள்ளது.



விபத்தில் பேருந்தின் சாரதி மற்றும் பாரவூர்தி சாரதி உட்பட 7 பேர் காயமடைந்துள்ளதனை தொடர்ந்து, வதுபிடிவல மருத்துவனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், பாரவூர்தியின் சாரதி உயிரிழந்துள்ளதாக காவற்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.



தெஹிவளை பிரதேசத்தினை சேர்ந்த 44 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

Check Also

நாடு முழுவதும் அடைமழை! நீரில் மூழ்கிய பல வீடுகள்

நாடாளவிய ரீதியில் நிலவும் அடைமழையுடன் கூடிய சீரற்ற காலநிலை தொடர்ந்தும் நீடிக்கும் என வளிமண்டவியல ;திணைக்களம் அறிவித்துள்ளது. கடந்த 24 …