ஹசாரே குழுவினரின் செயல்பாடுகள் நக்ஸலைட்டுக்களைப் போலவே உள்ளது எனவும் ஊழல்
விவகாரத்தில் தீர்வுகாண்பதற்கு பதிலாக அதை இழுத்தடித்து வருகின்றனர் எனவும் ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணிய சுவாமி தெரிவித்துள்ளார்.
ஊழலுக்கு எதிராக ஜனலோக்பால் மசோதாவை நிறைவேற்ற அன்னா ஹசாரே விரும்புகின்ற போதும் அவரது குழு உறுப்பினர்கள் நக்ஸலைட்டுக்கள் போலவே செயற்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மகசேசே விருதுபெற்றவர்கள் புத்திசாலிகள் இல்லை என கிரண்பேடியை மறைமுகமாக தாக்கியதாகவும் தெரியவருகின்றது.










