இராணுவ சீருடைகளுக்கு இணையான உடைகளை இலங்கையில் பயன்படுத்த தடைவிதிக்கும் வகையில் புதிய சட்டத்தை கொண்டு வர அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இராணுவ சீருடைகை்கு இணையான உடைகளை பயன்படுத்தி சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதை தடுக்கவே புதிய திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் எதிர்காலத்தில் இராணுவ சீருடைக்கு இணையான உடைகளை தம்வசம் வைத்திருப்பது, விற்பனை செய்வது என்பன சட்டவிரோதமான குற்றமாக கருதப்படும்.
இதனை தவிர 1980 இலக்கம் 44 வாக்காளர்களை பதிவு செய்யும் சட்டமூலத்தில் திருத்தங்களை செய்வும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதற்கான யோசனையையும் ஜனாதிபதியே முன்வைத்திருந்தார்.