உலகில் 4 வீதமானோர் இந்திய பணக்காரர்கள் – முகேஷ் அம்பானி முதலிடம்

உலக பணக்கார பட்டியலில் 4 வீதமானோர் இந்தியர்கள். அவர்களில் முகேஷ் அம்பானி இந்தியாவில் முன்னிலை பணக்காரராக இருக்கின்றார் என

அமெரிக்காவின் போர்ப்ஸ் நாளிதழ் தகவல் வெளியிட்டுள்ளது.

மேலும் இந்தியாவிலுள்ள 48 (Indian billionaires) பணக்காரர்களில் முகேஷ் அம்பானி முதலிடத்தில் உள்ளார்.உலகின் டாப் 1226 பணக்காரர்களின் 69 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் மெக்ஸிகோவின் கார்லோஸ் ஸ்லிம் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறார். 61 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 2வது இடத்தில் மைக்ரோசாப்ட் பில் கேட்ஸ் இருக்கிறார்.

இந்தியாவின் முகேஷ் அம்பானி 22.3 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 19வது இடத்திலும், லக்ஷ்மி மிட்டல் 20.7 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 21வது இடத்திலும், விப்ரோ அதிபர் அசிம் பிரேம்ஜி 15.9பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 41வது இடத்திலும்,

ஜிந்தல் குரூப் சாவித்ரி 10.9 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 80வது இடத்திலும், 8.1 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் பார்தி எண்டர்பிரைசஸ் தலைவர் சுனில் மிட்டல் 113வது இடத்திலும், முகேஷ் அம்பானியின் சகோதரர் அனில் அம்பானி, 7.8 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 118வது இடத்திலும் இருக்கிறார்கள்.

இவர்கள் தவிர இந்தியாவின் டி.எல்.எப்., கே.பி.சிங், ஹெச்.சி.எல் ஷிவ் நாடார், கோத்ரேஜ் – ஆதி கேத்ரேஜ், பஜாஜ் குரூப் தலைவர் ராகுல் பஜாஜ், இன்போசிஸ் நாராயண மூர்த்தி உள்ளிட்டவர்களும் போர்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள உலகப்பணக்காரர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

உலகப்பணக்காரர்கள் பட்டியலில் 425 பேர் அமெரிக்கர்கள். இதில் 11 பேர் டாப்-20 பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். ரஷ்யர்கள் 98 பேரும், சீனர்கள் 55 பேரும், இந்தியர்கள் 48பேரும், ப்ரிட்டிஷ் நாட்டவர் 37பேரும், பிரேசிலியர்கள் 36பேரும், கனடா நாட்டினர் 25 பேரும் போர்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள பணக்காரர்கள் பட்டியலில் இடம்பெறுள்ளனர்.

Special Recent Posts

20 வினாடிகளில் செல்போனை சார்ஜ் செய்யக்கூடிய கருவி: இந்திய-அமெரிக்க மாணவியின் சாதனை

20 வினாடிகளில் செல்போனை சார்ஜ் செய்யக்கூடிய கருவி: இந்திய-அமெரிக்க மாணவியின் சாதனை

May 21st, 2013

20 வினாடிகளில் கையடக்க தொலைபேசிக்கு சார்ஜ் செய்யக்கூடிய கருவியைக் அமெரிக்க மாணவி கண்டுபிடித்துள்ளார்[...]

இறுதிச் சுற்றுக்குள் நுழைவது யார்? சென்னை–மும்பை அணிகள் இன்று பலப்பரீட்சை

இறுதிச் சுற்றுக்குள் நுழைவது யார்? சென்னை–மும்பை அணிகள் இன்று பலப்பரீட்சை

May 21st, 2013

ஐ.பி.எல் கிரிக்கெட் சுற்றுத்தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியில்  சென்னை சூப்பர் கிங்ஸ்–மும்பை இந[...]

பத்திரிகை அலுவலகத்தில் மூவர் மர்ம நபர்களால் குத்திக்கொலை

பத்திரிகை அலுவலகத்தில் மூவர் மர்ம நபர்களால் குத்திக்கொலை

May 21st, 2013

திரிபுரா மாநிலத்தில் உள்ள தினசரி நாளிதழ் அலுவலகத்திற்குள் புகுந்த மர்ம நபர்கள் பட்டப்பகலில் 3 [...]

மட்டக்களப்பில், எரிவாயு சிலிண்டர் விழுந்து பாடசாலை மாணவி காயம்

மட்டக்களப்பில், எரிவாயு சிலிண்டர் விழுந்து பாடசாலை மாணவி காயம்

May 21st, 2013

மட்டக்களப்பு, ஓட்டமாவடி கொழும்பு பிரதான வீதியில், சமையல் எரிவாயு சிலிண்டர் லொறியில் இருந்து விழுந்தத[...]

21 மே 2013 தின பலன்

21 மே 2013 தின பலன்

May 21st, 2013

மேஷம் எண்ணம்போல் செயல்பட வேண்டும்மென எண்ணுவீர்கள். குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும். தாயாரின்[...]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*