Breaking News
Home / latest-update / யாழ்ப்பாணத்திலிருந்து சென்ற ரயிலில் மோதுண்டு தந்தை, மகள் பலி
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

யாழ்ப்பாணத்திலிருந்து சென்ற ரயிலில் மோதுண்டு தந்தை, மகள் பலி

கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில், மோட்டார் சைக்கிள் ஒன்று மோதுண்டதில், அதில் பயணித்த நபர் மற்றும் அவரது மகள் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இன்று அதிகாலை 6.45 மணியளவில் வேயங்கொட, வதுரவ ரயில் வீதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் மோதுண்டு குறித்த இருவரும் உயிரிழந்துள்ளனர்.

45 வயதுடைய தந்தையும் 11 வயதுடைய மகளுமே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர்களின் சடலங்கள் வத்துபிட்டவல வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

ரயில் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், ரயில் வீதியில் இந்த இருவரும் பயணிக்க முயற்சித்த போது, வேறு திசையில் இருந்து வந்த ரயில் இவர்களில் மோதியதாக குறிப்பிடப்படுகின்றது.

Check Also

யாழில் தீவிரமாக பரவும் டெங்கு…! சுற்றாடலை துப்பரவின்றி வைத்திருப்போருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை..!

யாழில் அண்மைக்காலமாக அதிகரித்திருக்கும் டெங்கு தொடர்பான அவசர கலந்துரையாடலொன்று யாழ். மாவட்டச் செயலகத்தில்  நேற்று  (13) வெள்ளிக்கிழமை நடைபெற்றது.மாவட்ட ஒருங்கிணைப்புக் …