Breaking News
Home / latest-update / 18 முதல் 24 வயதுக்குள் இருப்பவரா நீங்கள்..? – அமேசான் தரும் அமேஸிங் ஆஃபர்
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

18 முதல் 24 வயதுக்குள் இருப்பவரா நீங்கள்..? – அமேசான் தரும் அமேஸிங் ஆஃபர்

இப்போதெல்லாம் திரைப்படங்கள் திரையரங்கில் வெளியாகும்போது பேசப்படுவதைவிட ஸ்ட்ரீமிங் தளங்களில் வெளியான பின்புதான் சமூக வலைதளங்களில் அதிகம் விவாதிக்கப்படுகின்றன. சின்ன பட்ஜெட் படங்கள் தொடங்கி சூப்பர்ஸ்டார்கள் படங்கள் வரைக்கும் இது பொருந்தும். குறிப்பாக, மாற்றுமொழிப் படங்களுக்கு இது 100% பொருந்தும். நெட் ஃப்ளிக்ஸ், அமேசான் பிரைம், ஹாட் ஸ்டார் என இந்த ஸ்ட்ரீமிங் தளங்களின் எண்ணிக்கைகளும் அதிகரித்துக் கொண்டேயிருக்கின்றன. ஒவ்வோர் ஆண்டும் இவற்றுக்கும் பணம் செலவழிக்க வேண்டும் என்றாலும், இதில் வெளியாகும் திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ் எண்ணிக்கைக்கு விலை குறைவு என்கிறார் நெட்டிசன்கள். இப்போது, பயனர்களின் எண்ணிக்கையைக் கூட்ட ஆஃபர்களும் தரத் தொடங்கியிருக்கிறார்கள். அப்படியொரு ஆஃபர்தான் இப்போது அமேசான் தந்திருக்கிறது.



உங்கள் வயது 18-24க்குள் இருந்தால் உங்களுக்கு அமேசான் பிரைமின் ஆண்டுச் சந்தாவில் 50 % தள்ளுபடி கிடைக்கும். இப்போது அமேசான் பிரைமின் ஆண்டுச் சந்தா 999 ரூபாய். இந்த ஆஃபர்படி அதில் 500 ரூபாய் கேஷ்பேக்காக அமேசான் வாலட்டில் 10 நாள்களுக்குள் வந்துவிடும். அதை அவர்கள் மற்ற பேமென்ட்கள் மற்றும் பொருள்கள் வாங்க பயன்படுத்திக்கொள்ளலாம். ஜூலை 15 மற்றும் 16 ல் நடக்கவிருக்கும் பிரைம் சேலில் இந்த ஆஃபரைப் பெற்றுக்கொள்ளலாம் என அமேசான் அறிவித்திருக்கிறது. இதை அமேசானின் மொபைல் ஆப் மூலம் மட்டுமே பெற முடியும்.

அமேசான் தளத்திலிருக்கும் ‘youth offer’ பேனரை க்ளிக் செய்து அமேசான் பிரைம் மெம்பர்ஷிப் பெறும்போது வயதை உறுதி செய்ய பேன் கார்டு, முகவரிச் சான்று மற்றும் புகைப்படத்தை அப்லோடு செய்ய வேண்டும். அப்போதுதான் இந்த பிராசஸ் முழுமையடையும். அமேசான் பிரைம் மெம்பர்ஷிப் மூலம் பிரைம் வீடியோ, பிரைம் ம்யூஸிக், பிரைம் ரீடிங் ஆகியவற்றுடன் பொருள்கள் விரைவில் வீடு வந்து சேரும் வசதியும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆண்டுச் சந்தா இல்லாமல் மாதம் 129 ரூபாய் கட்டியும் பிரைம் பெறலாம். ஆனால், அதற்கு எந்த கேஷ்பேக்கும் கிடையாது.

\


Check Also

ஹெல்மெட் அணியாததால் அபராதம் – அதிர்ச்சி அடைந்த பஸ் டிரைவர்

நொய்டாவில் ஹெல்மெட் அணியாததால் பஸ் டிரைவருக்கு ரூ.500 அபராதம் விதித்த போக்குவரத்து துறையின் செயலால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். …