Breaking News
Home / latest-update / கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி 400 காங்கிரசார் மனு
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி 400 காங்கிரசார் மனு

சுப்ரீம்கோர்ட்டில் இன்று கர்நாடக இளைஞர் காங்கிரஸ் தலைவர் அனில் சாக்கோ ஜோசப் என்பவர் உள்பட 400 பேர் மனுதாக்கல் செய்தனர். கர்நாடகாவில் ராஜினாமா செய்துள்ள எம்.எல்.ஏ.க்கள் கட்சி தாவல் தடை சட்டத்தின் அடிப்படையில் தண்டிக்கும் வகையில் குற்றம் செய்துள்ளனர். எனவே அவர்களை தகுதி நீக்கம் செய்து உத்தரவிட வேண்டும்.



எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா குறித்து நடத்தப்படும் விசாரணை குறுகிய காலத்துக்குள் திட்டமிட்டபடி நடத்த முடியாது. எனவே அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு 400 காங்கிரசார் தங்களது மனுக்களில் கூறியுள்ளனர். இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா தொடர்பாக 2 மனுக்கள் விசாரிக்கப்படுகிறது. அந்த மனுக்களுடன் இந்த மனுவும் விசாரிக்கப்படுகிறது. இந்த நிலையில் சபாநாயகர் ரமேஷ்குமார் இன்று மீண்டும் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா குறித்து நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், “ராஜினாமா செய்துள்ள எம்.எல்.ஏ.க்கள் மனுக்கள் மீது எனக்கு திருப்தி ஏற்பட்டால் மட்டுமே ஏற்றுக்கொள்வேன்” என்று கூறினார். சபாநாயகரின் இந்த கருத்தால் அவர் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவை உடனடியாக ஏற்க மாட்டார் என்று கூறப்படுகிறது.



Check Also

பாலியல் துஸ்பிரயோக சம்பவத்துடன் தொடர்புடைய நபரை தாக்கிக் கொன்ற ஊர் மக்கள்

தம்புள்ள – கல்கிரியாகம, ஹபரத்தலாவ பிரதேசத்தில் பாலியல் துஸ்பிரயோக சம்பவத்துடன் தொடர்புடைய நபர் ஒருவரை ஊர் மக்கள் தாக்கிக் கொலை …