Breaking News
Home / latest-update / கொழும்பிலிருந்து சென்ற வான் விபத்து! மூவர் வைத்தியசாலையில்
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

கொழும்பிலிருந்து சென்ற வான் விபத்து! மூவர் வைத்தியசாலையில்

திருகோணமலை – கந்தளாய் பகுதியின், சேருவில பிரதான வீதியிலுள்ள பாலத்தில் வானொன்று மோதி விபத்திற்கு இலக்காகியுள்ளது.

குறித்த விபத்து இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதுடன், இதன்போது பலத்த காயங்களுக்கு உள்ளான மூவர் கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மூதூர், தோப்பூர் பகுதியை சேர்ந்த 35, 32 மற்றும் 15 வயதுடைய மூவரே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.



கொழும்பிலிருந்து மூதூர் பகுதிக்கு சென்ற வானே விபத்திற்கு உள்ளாகியுள்ளதுடன், அதிக வேகமும் சாரதியின் தூக்கமுமே விபத்துக்கு காரணமென சேருநுவர பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்து சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



Check Also

பாலியல் துஸ்பிரயோக சம்பவத்துடன் தொடர்புடைய நபரை தாக்கிக் கொன்ற ஊர் மக்கள்

தம்புள்ள – கல்கிரியாகம, ஹபரத்தலாவ பிரதேசத்தில் பாலியல் துஸ்பிரயோக சம்பவத்துடன் தொடர்புடைய நபர் ஒருவரை ஊர் மக்கள் தாக்கிக் கொலை …