Breaking News
Home / latest-update / 5G தொழிநுட்பம் என்றால் என்ன? 5G தொழிநுட்ப எதிர்ப்பு சரியானதா?
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

5G தொழிநுட்பம் என்றால் என்ன? 5G தொழிநுட்ப எதிர்ப்பு சரியானதா?

5ஜி தொழிநுட்பம் பற்றி பக்கம் பக்கமாக எழுதலாம் ஆனால் இதற்கு எதிராக ஒரு சில இளைஞர்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் நிலைக்கு காரணம் என்ன? 5G தொழிநுட்பம் என்றால் என்ன? இதன் நன்மை என்ன என்றே இந்த பதிவு ஆராய்கின்றது.

நாம் 4G பயன்படுத்துவது, இன்டர்நெட் வீடியோ காலிங், வீடியோ பாடல் என கேட்க பயன்படுத்துகிறோம் இது தான் அடிப்படையாக இருக்கிறது மேலும் நாம் ஒரு சில ஆப் மூவி பாடல் மற்றும் போட்டோக்களையும் டவுன் லோடிங் செய்து வருகின்றோம்.அதுவே நாம் 5G பயன்படுத்தினால் பல மடங்கு ஸ்பீட் வழங்கும் அதாவது 100 சதவீதம் ஸ்பீட் போன்றவற்றை வழங்கும்.

இந்த தொழிட்நுட்பம்

IEEE 802.11ac என்ற wireless Standard இது வேலை செய்கின்றது.

இதன் நன்மைகள்

1.  4G விட 1000 மடங்கு வேகமானது.
2. ஒருபிரதேசத்தில் உள்ள அனைத்து மக்களையும் கவரக்கூடிய  தன்மை
3. குறைந்த பற்றரி பயன்பாடு
4. செக்கனுக்கு 10GB க்குஅதிகமான தகவல் பரிமாற்றம் (BIT RATE 20GB / End User 10GB)
5.அனைத்து வகையான மெசின்களையும் தொடர்பு படுத்தக்கூடிய வசதி (வாகனங்கள், கணணிகள், மின்கம்பங்கள் etc (IOT System)
6 Cloud Technology மிகவும் பயனுள்ளது. எந்த விதமான கணணி அப்ளிகேசன்களையும் கணணியில் உட்புகுத்தாமலேயே இணையத்தில் வைத்து இயக்கமுடியும்.
7. மிக அதிக துல்லியமான தெளிவு தன்மை.
8. Zero Delay in Commutation
9. 4Gயை விட செலவு குறைவு
10. பாரிய ரவர்கள் இல்லாமல் உயரம் குறைந்த ரவர்களே போதுமானது.

இதற்கு மேலதிகமாக இதனால் ஏற்படும் பாதிப்புக்களாக நமது தமிழ் சமூகம் சொல்லும் குருவி பறவைகள் பாதிப்பு, கர்ப்பிணி பெண்களின் கருக்கள் கலையும், கேன்சர் வரும், தைரோட் பிரச்சனை வரும் என்பது எல்லாம் இதற்கு எதிரான விவாதங்களாக சொல்லப்பட்டவையே ஒழிய இது இன்னும் ஆய்வுகளில் உறுதிப்படுத்தப்பட்டவை அல்ல.உலகில் 10 இற்கு மேற்பட்ட நாடுகள் இந்த தொழிநுட்பத்தை தங்கள் நாட்டில் செயல்படுத்த தொடங்கி விட்டது. அமெரிக்கா, இங்கிலாந்து, ஜேர்மனி, இந்தியா போன்ற நாடுகளில் இந்த திட்டம் செயற்பாட்டில் உள்ளன. இங்கு வராத பாதிப்பா நமது மக்களுக்கு வந்துவிடப்போகின்றது.

நாம் அன்றாடம் நம் கையில் வைத்து இருக்கும் செல்போன் தரும் பாதிப்பைவிட இந்த டவர் தந்துவிடப்போவதில்லை.

Check Also

வன்முறையில் பலியான ரத்தன் லால் குடும்பத்துக்கு தலா ஒரு கோடி ரூபாய் நிதி – டெல்லி அரசு, பாஜக அறிவிப்பு

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெறுகின்றன. டெல்லியில் பல்வேறு அமைப்பினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். அதேசமயம் …