Breaking News
Home / latest-update / குற்றவுணர்வு
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

குற்றவுணர்வு

இருதிரியாய்ப் பிளந்து தர்க்கமிடும் சர்ச்சைப் பாம்பின்
நடு அண்ணத்தில் நின்று திகைக்கிறது
எனது குற்றவுணர்வு.
தவறிழைக்காமலே
கண்ணீரின் முன் தலைகவிழ்ந்து நிற்கிறது
நள்ளிரவில் ஒலிக்கும் வரண்ட இருமலில்
முதுகு குலுங்குகிறது
குழந்தை விழுந்து மூக்குடைத்துக்கொண்ட தரையில்
தன்னால் சிந்தப்படாத தண்ணீரைத் தேடுகிறது
பூட்டப்பட்ட அறைக்குள் நானிருந்தாலும்
என் பிரதிநிழலாய் எப்போதும்
கூடத்தினுள் நின்றுகொண்டிருக்கிறது
பிச்சைக்காரர்களின் விழிகளைத் தவிர்த்து
சில்லறைகளாகவும்
தெருநாய்களுக்குப் பிஸ்கெட்டாகவும்
சுடுவெயிலில் படுத்திருக்கும் முதியவளின் அருகில்
அவளறியாது விட்டுச்செல்லும் செருப்பாகவும்
விழும் குற்றவுணர்வே!
உன்னைக் கொல்வதென்றால்
புத்தகங்களுக்கு முந்தைய பிராயத்திற்குப்
பின்னகர வேண்டும்!

Check Also

பெருமளவு வரதட்சணைப் பணத்துடன் வந்து நின்ற மாமனாருக்கு மருமகன் கொடுத்த இன்ப அதிர்ச்சி..!!

ஒரு கோடி ரூபாய் கொடுத்தால்தான் திருமணம் என்று சொல்லும் சமூகத்திற்கு மத்தியில் இளைஞர் ஒருவர் 11 ரூபாய் வாங்கிக்கொண்டு திருமணம் …