Breaking News
Home / latest-update / பெண்கள் டேட்டிங் செல்வது ரொமான்சுக்கு இல்லையாம்….படிங்க… விழுந்து விழுந்து சிரிப்பீங்க!!!
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

பெண்கள் டேட்டிங் செல்வது ரொமான்சுக்கு இல்லையாம்….படிங்க… விழுந்து விழுந்து சிரிப்பீங்க!!!

டேட்டிங் கலாச்சாரம் இன்றைய நவநாகரீக இளைய தலைமுறையினரிடையே சாதாரணமான நிகழ்வாகிவிட்டது. யாரைக்கேட்டாலும், சென்னை போன்ற மெட்ரோ நகரங்களில், நேத்து டேட்டிங் போனேன், அடுத்தவாரம் என் பாய்பிரண்டு கூட டேட்டிங் போறேன் என்று சொல்வதும், அதை நாம் கேட்பதும் அன்றாட நிகழ்வாகிவிட்டது.



டேட்டிங் செல்லும் பெண்கள் குறித்த ஆய்வினை அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கும் அஜூசா பசிபிக் பல்கலைகழகம் மற்றும் மெர்செட் பல்கலைகழக பேராசிரியர்கள் மேற்கொண்டனர். பெண்களின் குணாதிசயங்கள் சார்ந்த இந்த ஆய்வு 820 பெண்களிடம் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவர்களிடம், குணாதிசயம் , பாலின பாகுபாடு குறித்த நம்பிக்கைகள் , பிடித்தமான உணவு மற்றும், அதை உட்கொள்ளும் விதம், எடுத்துக்கொள்ளும் நேரம் உள்ளிட்ட அம்சங்கள் குறித்த கேள்விகள் இந்த பெண்களிடம் கேட்கப்பட்டன. இவர்களில் 23 சதவீத பெண்கள், இலவசமாக நல்ல உயர்தர உணவு கிடைக்கும் என்பதாலேயே டேட்டிங் செல்வதாக தெரிவித்துள்ளனர். மற்ற பெண்களும் பிடித்தமான உணவு கிடைப்பதால் மிக்க மகிழ்ச்சியடைவதாக தெரிவித்துள்ளனர்.

அடுத்ததாக 357 பெண்களிடம் நடத்தப்பட்ட ஆய்வு அல்லது கருத்துக்கணிப்பில் 33 சதவீத பெண்கள், நல்ல உயர்தர உணவு இலவசமாக கிடைக்கும் என்பதாலேயே, டேட்டிங்கிற்கு விரும்பி செல்வதாக தெரிவித்துள்ளனர்.



Check Also

ஹெல்மெட் அணியாததால் அபராதம் – அதிர்ச்சி அடைந்த பஸ் டிரைவர்

நொய்டாவில் ஹெல்மெட் அணியாததால் பஸ் டிரைவருக்கு ரூ.500 அபராதம் விதித்த போக்குவரத்து துறையின் செயலால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். …