Breaking News
Home / latest-update / இன்றைய ராசிபலன் – 06.07.2019
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

இன்றைய ராசிபலன் – 06.07.2019

மேஷம்

வேலையிலும் வீட்டிலும் சில அழுத்தங்கள் சட்டென கோபத்தை ஏற்படுத்தும். புதுமையான சிந்தனை உள்ளவர்களின் அறிவுரையின்படி உங்கள் பணத்தைப் போடுவதுதான் இன்றைய உங்களின் வெற்றிக்கான பார்முலா. அது நல்ல அனுபவம். தங்கள் சாதனைகளால் பிள்ளைகள் உங்களை பெருமைப்பட வைப்பார்கள். இன்று உங்கள் மனதை அசைத்துப் பார்க்கக் கூடிய ஒருவரை சந்திப்பதற்கான வாய்ப்பு மிக பலமாக உள்ளது. சிலருக்கு எதிர்பாராத பயணம் கடினமாகவும் மன அழுத்தம் தருவதாகவும் இருக்கும். இன்று நீங்கள் உங்கள் துணையின் சிறப்பு கவனத்தை பெறுவீர்கள்.

ரிஷபம்
உங்களுக்கு அதிக சக்தி இருக்கும். மற்றவர்களுக்காக நிறைய செலவு செய்ய விரும்புவீர்கள். மக்கள் உங்களுக்கு புதிய நம்பிக்கைகளும் கனவுகளும் ஏற்படுத்துவார்கள் – ஆனால் உங்கள் சொந்த முயற்சியை வைத்தே அவை அமையும். சிறிய அளவில் அன்பையும் கனிவையும் காட்டி இந்த நாளை விசேஷமானதாக ஆக்குங்கள். பயணம் பலன் தரும், ஆனால் செலவுமிக்கதாக இருக்கும். சொர்கம் பூமியில் உள்ளதென்று இன்று உங்கள் வாழ்க்கை துணை உங்களுக்கு உணர்த்துவார்.
மிதுனம்
உங்கள் உடல் தகுதியை பராமரிக்கக் கூடிய வகையில் விளையாட்டுகளில் நீங்கள் ஜாலியாக இருக்கும் வாய்ப்பு உள்ளது. புதிய பண ஒப்பந்தம் இறுதியாகும், புதிதாக பணம் வரும். மற்றவர்களை காயப்படுத்தாமல் இருக்க முயற்சி செய்யுங்கள். குடும்பத் தேவைகளுக்கு ஏற்ப மாறிக் கொள்ளுங்கள். இலையுதிர்காலத்தில் மரத்தில் இருந்து விழும் இலையைப் போன்றது உங்களின் காதல் வாழ்க்கை. இன்று நல்ல ஐடியாக்களாக வைத்திருப்பீர்கள். செயல்பாடுகளில் உங்களுடைய தேர்வுகள் எதிர்பார்த்ததைவிட அதிக லாபத்தை தரும். உங்கள் வேலை பளுவினால் தன்னை உதாசீனப்படுத்துவதாக உங்கள் துணை நினைக்க கூடும். இதனால் உங்கல் துணைவர்/ துணைவி மாலையில் வேதனையுடன் காணப்படுவார்.



கடகம்
அதிகம் சாப்பிடுவதைத் தவிர்த்திடுங்கள். உடலை பிட்டாக வைத்துக் கொள்ள ரெகுலராக ஹெல்த் கிளப்புக்கு செல்லுங்கள். நிதி நிலைமை நிச்சயமாக மேம்படும். மனைவியுடன் ஷாப்பிங் செல்வது உடனடி மகிழ்ச்சி தரும். உங்களுக்கு இடையில் புரிதலை அதிகரிக்கவும் அது உதவும். ஆனந்தத்தைத் தருவதாலும், முந்தைய தவறுகளை மன்னிப்பதாலும் உங்கள் வாழ்வை அர்த்தம் உள்ளதாக ஆக்குவீர்கள். ஷாப்பிங் செல்லும்போது அதிகம் செலவு செய்வதை தவிர்த்திடுங்கள். உங்கள் துணையுடனான இன்ப உரையாடல் மூலம் நீங்கள் ஒருவரை எவ்வளவு நேசிக்கிறீர்கள் என இன்று தெரிந்து கொள்வீர்கள்.
சிம்மம்
அளவுக்கு அதிகமான கவலை மன அமைதியைக் கெடுக்கும். ஒரு சிறு ஏக்கம், கடுகடுப்பு மற்றும் கவலையும் உடலை மோசமாகப் பாதிக்கும் என்பதால் அவற்றைத் தவிர்க்கவும். அனைத்து வாக்குறுதிகளும் நிதி பரிவர்த்தனைகளும் கவனமாக கையாளப்பட வேண்டும். ஒரு நண்பர் தன் தனிப்பட்ட பிரச்சினைகளைத் தீர்க்க உங்களிடம் ஆலோசனை கேட்பார். தவறான தகவல் தொடர்பு அல்லது தகவல் உங்கள் நாளை டல்லாக்கும். நெருக்கமானவர்களுடன் நிறைய கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நாள் முழுக்க டென்சனாக இருக்கும். அதிக செலவு உங்கள் இருவருக்கும் இடையில் சண்டையை ஏற்படுத்தலாம்.
கன்னி
உங்களுடைய பாசிட்டிவ் எண்ணம் மற்றும் நம்பிக்கையால் உங்களைச் சுற்றியுள்ளவர்களிடம் நற்பெயர் பெறுவீர்கள். பணத்தைக் கையாள்வது இன்று கஷ்டமாக இருக்கும் – அதிகம் செலவு செய்யலாம் அல்லது பண பர்ஸை தொலைக்கலாம் – கவனமின்மையால் நிச்சயமாக சில இழப்பு ஏற்படும். குடும்பத்தினரின் தேவைகளுக்கு முன்னுரிமை கொடுங்கள். அவர்கள் மீது அக்கறை காட்டுகிறீர்கள் என்பதை அவர்களை உணரச் செய்வதற்கு, அவர்களின் சுக துக்கங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் காதல் வாழ்வில் இன்று மிக அருமையான நாள். அவசரப்பட்டு முடிவெடுக்காதீர்கள், வாழ்வில் பிற்காலத்தில் வருத்தப்பட நேரிடலாம். உங்கள் மண வாழ்வில் இனிமையை கூட்டும் சிறந்த நாள் இது.



துலாம்
கடந்த காலத்தைய மோசமான முடிவுகள் இன்று உங்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தி மனதில் குழப்பத்தை ஏற்படுத்தும் – நீங்கள் ஆதரவின்றி நிற்பதாக, அடுத்து என்ன முடிவெடுக்க முடியாதவராக இருப்பீர்கள் – மற்றவர்களின் உதவியை நாடுங்கள். ஊகங்களால் லாபம் கிடைக்கும். உங்கள் வீட்டைச் சுற்றி உடனடியாக சில சுத்தம் செய்யும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். உங்கள் அன்புக்குரியவருடன் பிக்னிக் சென்று மதிப்புமிக்க நினைவுகளை மறுபடி கொண்டு வாருங்கள். தகவல் தொடர்புகளை கவனமாகக் கையாள வேண்டும். இன்று உங்கள் திருமண வாழ்வு இனிமையாக, குதூகலமாக மற்றும் வரமாக அமையும்..
விருச்சிகம்
உடல்நலம் நன்றாக இருக்கும். நீண்டகாலம் நிலுவையாக உள்ள பாக்கிகள் வசூலாகும். உங்கள் உணர்வுகளைக் கட்டுப்படுத்துவதில் பிரச்சினை இருக்கும் – ஆனால் சுற்றியுள்ளவர்களை தொந்தரவு செய்யாதீர்கள். இல்லாவிட்டால் தனிமையில் சிக்குவீர்கள். உண்மையான காதலர் கிடைக்காமல் இருப்பதால் உங்களுக்கு ரொமான்சுக்கு மிக நல்ல நாள் அல்ல. சமூக மற்றும் ஆன்மிக நிகழ்ச்சிகளுடன் இந்த நாள் இனிமையாக இருக்கும். சூடான வாக்குவாததுக்கு பிறகு, இணக்கமாகி உங்கள் துணையுடன் இனிமையாக மாலை பொழுதை கழிப்பீர்கள்.
தனுசு
இன்று அமைதியாக – டென்சன் இல்லாமல் இருங்கள். நீண்ட கால அடிப்படையில் நீங்கள் முதலீடு செய்தால் கணிசமான லாபம் கிடைக்கும். தந்தை கடுமையாக நடந்து கொள்வதால் மன உளைச்சல் ஏற்படலாம். ஆனால் நிலைமையை கட்டுப்பாட்டில் வைக்க நீங்கள் அமைதியாக இருக்க வேண்டும். இதனால் உங்களுக்குப் பலன் கிடைக்கும். ரொமாண்டிக் உறவு இன்று பாதிக்கப்படும். கடந்த காலத்தைச் சேர்ந்த ஒருவர் உங்களைத் தொடர்பு கொள்வார். இது நினைவில் கொள்ளும் நாளாக மாறும். உங்கள் துணையின் தேவைகள் இன்று உங்களை சலிப்படைய செய்யலாம்.



மகரம்
உங்களை மூடிக் கொண்டு வளர்ச்சிக்கு இடையூறாக இருக்கும் இருளை விலக்குங்கள். புதிய பண ஒப்பந்தம் இறுதியாகும், புதிதாக பணம் வரும். இன்று உங்களுக்கு புதிய தோற்றம் – புதிய அவுட்பிட் – புதிய நண்பர்கள் அமையலாம். சமூகத் தடைகளைக் கடக்க முடியாதிருக்கும். உங்கள் விருப்பத்தின்படியே பெரும்பாலான விஷயங்கள் நடக்கும்போது – சிரிப்பு நிறைந்த நாள். வேண்டுமென்றே உங்களை உங்கள் துணை வார்தைகளால் காயப்படுத்துவார். இதனால் நீங்கள் வருத்தமடைய கூடும்.
கும்பம்
இன்று ரிலாக்ஸ் ஆகவும் அனுபவிப்பதற்கேற்ற மன நிலையிலும் இருப்பீர்கள். உபரி பணம் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்யப்பட வேண்டும். உங்களின் தாராள மனதை உங்கள் நண்பர்கள் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள இடம் தராதீர்கள். இன்று உங்கள் காதல் மலர்ந்து நீங்கள் என்ன நல்லது செய்திருக்கிறீர்கள் என்பதைக் காட்டும். இன்று கூடி பழகும் நிகழ்ச்சிக்கு உங்களுக்கு நேரம் இருக்கும். நீங்கள் அதிகம் விரும்பும் செயலை பாலோ பண்ணவும் நேரம் இருக்கும். இந்த நாள் உங்கள் திருமண வாழ்வில் தனிச்சிறப்பான நாளாக இருக்கும். இன்று மிக அசாதாரண விஷயம் ஒன்று நடக்கும்.
மீனம்
நீண்ட காலம் நிலுவையாக உள்ள பிரச்சினைகளை, உங்களின் வேகமான செயல்பாடு தீர்த்து வைக்கும். நாளின் பிற்பகுதியில் நிதி நிலைமை மேம்படும். மற்றவர்களிடம் மதிப்பைப் பெறக் கூடிய திறமைக்கு வெகுமதி கிடைக்கும். உங்கள் தைரியத்தால் காதலில் வெற்றி பெறுவீர்கள். பேசும்போது ஒரிஜினலாக இருங்கள், நடிப்பதால் எதுவும் கிடைக்காது. உங்களுக்குள் நிகந்த சிறு ஊடலை மறந்து உங்கள் வாழ்க்கை துணை அன்புடன் தழுவிக்கொள்வார்.



Check Also

நள்ளிரவில் தடம் புரண்ட புகையிரதம்….தெய்வாதீனமாக உயிர் தப்பிய 250 பயணிகள்..!!

புகையிரதம் ஒன்று தடம்புரண்டதால் திருகோணமலை, மட்டக்களப்பிற்கிடையிலான புகையிரத சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.நேற்று இரவு 11 மணியளவில் கொழும்பு கோட்டையிலிருந்து மட்டக்களப்பு …