Breaking News
Home / latest-update / நீர் முட்டைகளை உடைக்கும் `மியாவ்’கள்
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

நீர் முட்டைகளை உடைக்கும் `மியாவ்’கள்

வளர்ப்புப்பூனைக்கும் அலங்கார மீன்களுக்குமான
உறவென்பது கண்ணாடித்தொட்டி அறிந்த ரகசியம்
சதுரக்கடலை அவ்வப்போது வட்டமடிக்கும்
மியாவ்களுக்கு விசிறத்தொடங்கும் வண்ணத் துடுப்புகள்

இமைகளை மூடிக்கொண்டு சயனிக்கும் தருணங்களில்
தன் ஒளிரும் கண்களை நீருக்குள் நீந்தவிடும்
பூச்சையின் காதுகள் மெதுவாக அசைந்துகொண்டிருக்கும்,
சலசலவென நீரின் சப்தமென செவிக்குள் நுழைந்து
தாலாட்டுப் பாடும் மீனின் பாஷைகள்

தொட்டிக்குள் மிளிரும் ஜோடி கால்பந்துகளை
முட்டி விளையாடும் மீன்கள்
அளவில்லா முத்தங்களைப் பரிசளிக்கின்றன.
தன் வால் விறைத்து உயர்த்தி நன்றி நவிழும் பூனைக்கு
காற்றுக்குமிழ்களைப் பூக்கின்றன மீன்கள்

பூனைக்கும் வளர்ப்பு மீன்களுக்கும்
ரகசிய உடன்படிக்கையெல்லாம் இல்லை
சில நேரங்களில் தொடர்ந்து வரும்
மியாவ் சப்தங்கள் பசியால் வருவதாக நினைக்கும் மீன்கள்
அளவுக்கதிகமாக வெளியேற்றுகின்றன பிராணவாயுக் குமிழ்களை

மியாவ் கூச்சல்கள்தான் கண்ணாடித்தொட்டிக்குள் பாய்ந்து
மீன்கள் சுவாசிக்க குமிழ்களை உடைப்பதாகப் பூனையும்
நீர் முட்டைகளை சாப்பிட்டு
பூனை பசியாற்றிக்கொள்வதாக மீன்களும் நம்புவதை
ஒருபோதும் தடுத்ததில்லை கண்ணாடிச் சுவர்கள்.

– வலங்கைமான் நூர்தீன்

Check Also

பாலியல் துஸ்பிரயோக சம்பவத்துடன் தொடர்புடைய நபரை தாக்கிக் கொன்ற ஊர் மக்கள்

தம்புள்ள – கல்கிரியாகம, ஹபரத்தலாவ பிரதேசத்தில் பாலியல் துஸ்பிரயோக சம்பவத்துடன் தொடர்புடைய நபர் ஒருவரை ஊர் மக்கள் தாக்கிக் கொலை …