Breaking News
Home / latest-update / கலர் டிஸ்ப்ளேவுடன் களமிறங்கும் MI பேண்ட் 4 – வேற என்ன ஸ்பெஷல்?
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

கலர் டிஸ்ப்ளேவுடன் களமிறங்கும் MI பேண்ட் 4 – வேற என்ன ஸ்பெஷல்?

சந்தைக்கு வந்து சில வருடங்கள்தான் ஆகிறதென்றாலும் இந்திய ஃபிட்னஸ் பேண்ட் சந்தையில் ஷியோமிதான் ராஜா. கடைசியாக வெளியான MI பேண்ட் 3 உட்பட அறிமுகப்படுத்திய MI பேண்ட் 4 ஃபிட்னஸ் பேண்ட்களுமே ஹிட்தான். இதன் புதிய அப்டேட்டாக விரைவில் வரவிருக்கிறது MI பேண்ட் 4.

இதைச் சமீபத்தில் சீனாவில் அறிமுகப்படுத்தியிருக்கிறது ஷியோமி. இதில் என்ன ஸ்பெஷல்? வசதிகளைப் பொறுத்தவரை வேற லெவல் மாற்றங்கள் எதுவும் இல்லைதான். எல்லாம் சின்னச் சின்ன மாற்றங்கள்தான். ஆனால், 0.95 இன்ச் MI பேண்ட் 4 சூப்பர் AMOLED கலர் டிஸ்ப்ளே (120×240 pixels) கொடுக்கப்பட்டுள்ளது. முந்தைய பேண்ட் 3, 0.78 இன்ச் OLED டிஸ்ப்ளேவுடன் (128×80 pixels) வந்திருந்தது. கலர் டிஸ்ப்ளே என்பதால் தோற்றம் நன்றாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். முன்புபோல இதே ஸ்கிரீனில் ஆப் நோட்டிஃபிகேஷன்களைப் பார்க்க முடியும். கால்களை அட்டெண்ட் செய்ய முடியும்.

முதல்முறையாக பேண்ட் 4-ல் மைக் சேர்க்கப்பட்டிருக்கிறது. Six-axis motion சென்சாருடன் வருவதால் நடப்பது, ஓடுவது, நீச்சல் அடிப்பது போன்ற நடவடிக்கைகள் முன்பைவிட சிறப்பாகக் கணக்கிடப்படும். 50 மீட்டர் வரை வாட்டர்ஃப்ரூப், வானிலை அறிக்கை, மெசேஜ்களை வாசிக்கும் வசதி என பேண்ட் 3-யில் கலக்கிய வசதிகளும் இந்த மாடலில் கொடுக்கப்பட்டுள்ளன. இதுவும் ஒரு சார்ஜில் 20 நாள்கள் தாக்குப்பிடிக்கும் எனக் கூறும் ஷியோமி MI பேண்ட் 3-யின் ஸ்ட்ராப் இதற்கும் சேரும் என்றும் தெரிவித்திருக்கிறது.

ஹானர், சாம்சங் என இப்போது முன்பைவிடவும் இந்தச் சந்தையில் கடும்போட்டி நிலவுகிறது. இதைத்தாண்டி ஷியோமி பேண்ட் 4 சாதிக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். விலை அதில் முக்கிய பங்கு வகிக்கும்.

தற்போது சீனாவில் மூன்று வேரியன்ட்கள் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தாலும் அதில் ஒன்றுதான் இந்தியாவில் வெளியாகும். சீனாவில் அறிமுகமாகியிருக்கும் விலையைப் பார்த்தால் இந்தியாவில் 2,000 ரூபாய் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் எப்போது அறிமுகமாகும் என்ற சரியான தகவல்கள் இன்னும் கிடைக்கப்பெறவில்லை.

Check Also

பாலியல் துஸ்பிரயோக சம்பவத்துடன் தொடர்புடைய நபரை தாக்கிக் கொன்ற ஊர் மக்கள்

தம்புள்ள – கல்கிரியாகம, ஹபரத்தலாவ பிரதேசத்தில் பாலியல் துஸ்பிரயோக சம்பவத்துடன் தொடர்புடைய நபர் ஒருவரை ஊர் மக்கள் தாக்கிக் கொலை …